Xiaomi Mi Band: விற்பனையில் புரட்சி செய்த Mi பேண்டின் அடுத்த மாடல் ரிலீஸ்!

Xiaomi Mi Band: பெரும்பாலான இந்திய பயனர்களை ஸ்மார்ட் பேண்டின் பக்கம் சாய்ந்த பெருமை
சியோமி
நிறுவனத்திற்கு உண்டு எனலாம். அந்த அளவிற்கு நிறுவனத்தின் Mi Band விற்பனையில் சக்கைபோடு போட்டுள்ளது.

சமீபத்தில் நிறுவனம் வெளியிட்ட Mi Band 6 ஸ்மார்ட் பேண்டும் நல்ல விற்பனையைக் கண்டது. இந்த நிலையில், புதிய பேண்ட் எப்போது வரும் என்று காத்திருந்த பயனர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக சீனாவின் ஷாப்பிங் தளமான jd.com இல் புதிய
Xiaomi Mi Band 7
பட்டியலிடப்பட்டுள்ளது.


Redmi Note 11T Series: அடுத்த ஆட்டத்துக்கு தயாராகும் ரெட்மி – கசிந்த புதிய தகவல்கள்!

மேலும், இந்த புதிய ஸ்மார்ட் போண்டிற்கான முன்பதிவு நாளை (மே 25) தொடங்கவுள்ளது. பழைய மி பேண்ட் 6 வாட்சை போலைவே இதிலும் இரண்டு வேரியண்டுகள் வருகிறது. ஒன்று NFC உடனும், மற்றொன்று என்.எஃப்.சி இல்லாமலும் வெளியாகும் என்று தெரியவந்துள்ளது.

Bill Gates: தல… என்ன போன் வெச்சிருக்கார் தெரியுமா – ஆனா சத்தியமா நீங்க நெனச்சது இல்ல!

சியோமி மி பேண்ட் 7 விலை (Xiaomi Mi Band 7 Price India)

இந்த ஸ்மார்ட் போண்டின் விலை குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. பழைய வெர்ஷனான Mi Band 6 இந்தியாவில் ரூ.3,499 ஆக விற்பனை செய்யப்படுகிறது. எனவே, புதிய ஸ்மார்ட்பேண்டின் விலை 500 ரூபாய் கூடுதலாக ரூ.3,999 ஆக விற்பனைக்குக் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி மி பேண்ட் 7 அம்சங்கள் (Xiaomi Mi Band 7 Specifications)

புதிய சியோமி மி ஸ்மார்ட் பேண்டில் 1.62″ இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே இருக்கும் என தெரியவந்துள்ளது. இதுவே பழைய பேண்ட் 6-இல் 1.56″ இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டதாக இருந்தது. பயனர் அனுபவத்தை இது மேம்படுத்தும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

SpO2 கண்காணிப்பைப் பொருத்தவரை அமைக்கும் இன்னும் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு 90% விழுக்காட்டுக்கு மேல் குறைந்தால், உடனடியாக ஸ்மார்ட் பேண்ட் அதிர்வுகள் மூலம் பயனர்களுக்கு சமிஞ்சை கொடுக்கும்.


Twitter Deal: வெடிக்கும் சர்ச்சை! ஆதாரத்தை கோரும் எலான் மஸ்க்!

முக்கியமான புதிய அம்சம் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சிக்குப் பிறகு ஆக்சிஜன் அளவைக் கண்காணிப்பது. மொத்தம் 7 நாள்களுக்கு இந்த தகவலை மி பேண்ட் 7 சேமித்து வைக்கிறது.

இதுபோன்ற பல முக்கிய அம்சங்களைக் கொண்டிருக்கும் இந்த புதிய ஸ்மார்ட் பேண்ட், பல தகவல்களை சேகரித்து, பயனர்களின் உடலுக்கு தேவையான பரிந்துரைகளை உடனுக்குடன் வழங்குகிறது.

TRAI: நம்பர் இல்லணாலும் பராவால்ல… இனி அழைப்பவரோட ஆதார் பெயர் போன்ல காட்டும்!

விற்பனையில் புரட்சி

Xiaomi Mi Band 7 நாளை சீனாவில் வெளியாகிறது. இது ஐரோப்பிய சந்தைக்குள் நுழைய ஒன்றிரண்டு மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. எனினும் சியோமி மி ஸ்மார்ட் பேண்டை வரவேற்க இந்திய பயனர்கள் தயாராகி வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்

சியோமி இதுவரை 140 மில்லியன் ஸ்மார்ட் பேண்டுகளை உலகளவில் விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. மி பேண்ட் 6 மட்டும் அது வெளியான முதல் மாதத்தில், ஒரு மில்லியன் ஏற்றுமதிகளை பெற்று டாப் நிறுவனங்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ஜியோமி Mi பேண்ட் விவரங்கள்முழு அம்சங்கள்சிறப்புகள்Water Resistant, Alarmசின்க்கிங்Bluetooth Syncingபேட்டரிUpto 30 Days battery life (41 mAh)activity_trackingSteps, Hours Slept Trackingமுழு அம்சங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.