எல்ஐசி டிவிடெண்ட் கிடைக்குமா.. ஐபிஓவில் விட்டதை Q4ல் அறிவிக்குமா?

லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் நிர்வாக குழுவானது வரவிருக்கும் மார்ச் காலாண்டு முடிவின் போது, டிவிடெண்ட் பற்றிய அறிவிப்பினை கொடுக்கலாம் என்ற பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

மார்ச் 31, 2022வுடன் முடிவடைந்த நிதியாண்டின் நிதி நிலை அறிக்கையினை வெளியிடும்போது, டிவிடெண்டினை பற்றிய அறிவிப்பும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்ஐசி (LIC)-யின் நிர்வாக குழு கூட்டம் மே 30 அன்று நடைபெறவுள்ளது. ஆக இதன் வருவாய் விகிதம், லாபம், டிவிடெண்ட் பற்றிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும் ஏமாற்றம் அளிக்கும் எல்ஐசி.. 4 நாளில் ரூ.77,600 கோடி சந்தை மதிப்பு இழப்பு.. ஏன்?

வலுவான வளர்ச்சி

வலுவான வளர்ச்சி

எல்ஐசி நிறுவனம் பங்கு வெளியீட்டினை செய்த பிறகு முதல் முறையாக வெளியிடவுள்ள காலாண்டு முடிவு இதுவாகும். இதற்கிடையில் இன்று இப்பங்கின் விலையானது சற்று அதிகரித்து காணப்படுகின்றது. கொரோனா காரணமாக வலுவான வளர்ச்சியினை கண்டு வரும் நிலையில், இது வரவிருக்கும் காலாண்டு முடிவுகளில், சாதகமான அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய பங்கு விலை நிலவரம்?

இன்றைய பங்கு விலை நிலவரம்?

என்.எஸ்.இ-யில் இப்பங்கின் விலையானது சற்று அதிகரித்து, 823.10 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்று இதன் உச்ச விலை 834.70 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 816.85 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 949 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச பங்கு விலை 803.65 ரூபாயாகும்.

பி.எஸ்.இ-யில் இப்பங்கின் விலையானது சற்று அதிகரித்து, 823.75 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்று இதன் உச்ச விலை 834.50 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 815 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 949 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச பங்கு விலை 804 ரூபாயாகும்.

 

பங்கு வெளியீடு
 

பங்கு வெளியீடு

சமீபத்தில் வெளியிடப்பட்ட பங்கு வெளியீட்டில் 3 மடங்கு விண்ணப்பத்தினை பெற்றுள்ளது. அரசு தன் வசம் இருந்த மொத்த பங்கினில் 3.5% அல்லது 22.13 கோடி பங்குகளை விற்பனை செய்தது. இந்த பங்கு வெளியீட்டில் பங்கு விலை 902 – 949 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. எனினும் பங்குகள் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நாளே தள்ளுபடி விலையில் பட்டியலிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எல்ஐசியின் தொடக்கம்

எல்ஐசியின் தொடக்கம்

செப்டம்பர் 1,1956ல் 245 தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டதாகும். இதன் ஆரம்ப மூலதனம் 5 கோடிக்கும் மேல். டிசம்பர் 2021 நிலவரப்படி, பிரீமியங்கள் அல்லது மொத்தமாக எழுதப்பட்ட பிரீமியத்தின் அடிப்படையில் எல்ஐசி 61.6% பங்குகளை கொண்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

LIC may consider dividend along with march quarter results

LIC’s board is expected to announce the dividend by the end of the March quarter.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.