போபால் : இந்த உலகில் அழகான மொழி என்றால் அது அன்பு என்ற மொழி மட்டும் தான் அன்பு யாரை வேண்டுமானாலும் அடைத்து வைக்கும் அதன் சிறைக்குள் அத்தகைய மாசற்ற அன்புக்கும், காதலுக்கும் இலக்கணமாக திகழ்கிறார் மத்திய பிரதேசத்தை ஒரு பிச்சைக்கார முதியவர். மத்திய பிரதேசம் சிந்த்வாராவில் தெருக்கள் தோறும் நடந்து சென்று யாசகம் எடுத்து பிளைத்து வருகிறார் சந்தோஷ் குமார். இந்த மாற்று திறனாளி முதியவர் தன்னுடன் வீதிவீதியாக நடந்து வரும் மனைவி முன்னிக்கு கடும் முதுகு வழி ஏற்பட்டது, இதனால் துடித்துப்போன சந்தோஷ் குமார் தாளாத வெயிலில் பிச்சையெடுத்து 90000 ரூபாய் தனது மனைவிக்கு மொப்பேடு ஒன்றை வாங்கி தனது மனைவியை நெகழவைத்துள்ளார். ஆதரவற்ற தங்கள் இருவரும் இனி சிஓநீ-இட்டார்சி- என தூரமான இடங்களுக்கு செல்லமுடியும் என்று கூறுகிறார் சந்தோஷ் குமார். தள்ளாத வயதில் தனது மனைவி மீது சந்தோஷ் குமார் கொண்ட காதல் இணையவாசிகள் கொண்டாடியும் பாராட்டியும் வருகின்றனர்.