“ஒரு லட்சம் பவுன் நஷ்ட ஈடு கொடுக்கிறயா… இல்லன்னா அணை கட்றியா..?” – மேட்டூர் அணை உருவான பின்னணி…
தமிழ்நாட்டில், நெற்களஞ்சியமான தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைச் செழிக்கச் செய்வது மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் காவிரி நீர்தான். 1934-ம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வந்த மேட்டூர் அணைக்கு இன்னொரு பெயர் ‘ஸ்டான்லி நீர்த்தேக்கம்’. எதனால் இந்த பெயர்..? மேட்டூர் அணை உருவானதன் பின்னணி என்ன..?
தமிழக மன்னர்கள், மைசூர் மன்னருக்கு கப்பம் கட்டிய காலம் அது. பிரிட்டிஷாருக்கு அப்போது ஒரு பகுதி வரி வசூல் உரிமைதானே தவிர, முழுஆளுமையுமில்லை. இந்தச் சூழலில்தான், 1801 ஆம் ஆண்டு முதலே மேட்டூரில் அணைகட்டுவதற்கு, பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி முயன்றது. அதற்கு மைசூர் சமஸ்தானம் தெரிவித்த ஆட்சேபணையால் அத்திட்டம் கைவிடப்பட்டது. பின்பு 1835 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் அதே எதிர்ப்பு காரணமாக தோல்வியடைந்தது.
இந்த நிலையில்தான், தஞ்சை மாவட்ட விவசாயிகள் ஒன்று சேர்ந்து, “தங்களுக்கு புயல் மற்றும் வெள்ள சேதத்தினால் ஏற்படும் இழப்புகளுக்கு ஆண்டு தோறும் 30 லட்சம் ரூபாயை நஷ்டஈடாக மைசூர் சமஸ்தானத்தார் கொடுக்கவேண்டும்” என அப்போதைய தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் மூலம், மைசூர் சமஸ்தானத்திற்கு நோட்டீஸ் அனுப்பினர். அன்றைய தேதிக்கு ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.30 மட்டுமே. அதன்படி கணக்கிட்டால், அந்த 30 லட்சம் ரூபாய்க்கு 1 லட்சம் பவுன் தங்கம் வாங்க முடியும். இதை கணக்குப்போட்ட மைசூர் சமஸ்தானம், இப்படி வருடா வருடம் தண்டம் கொடுப்பதைக் காட்டிலும், மேட்டூரில் அணைகட்டுவதற்கு சம்மதித்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தது.
அதனைத் தொடர்ந்து, சென்னையில் வசித்து வந்த இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்டேன்லி என்ற பொறியாளர் மூலம், ரூ.4.80 கோடி செலவில் 1925 ஆம் ஆண்டு மேட்டூர் அணை கட்டும் பணி தொடங்கி, 1934 ல் முடிவடைந்தது. அதே ஆண்டு ஆகஸ்டு 21 ல், அப்போதைய மெட்ராஸ் கவர்னர் சர் ஜார்ஜ் பிரெடரிக் ஸ்டான்லியால் திறந்துவைக்கப்பட்டது. அவர் பெயரால்தான், மேட்டூர் அணை, ‘ஸ்டான்லி நீர்த்தேக்கம்’ என்று அழைக்கப்பட்டது. இவர்தான் ராயபுரம் மருத்துவக் கல்லூரியில், மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில்
5 ஆண்டு டிப்ளமோ படிப்பை அறிமுகப்படுத்தினார். அதன் பின்னர்தான் ராயபுரம் மருத்துவக் கல்லூரி, 1938 ஆம் ஆண்டு ஜூலை 2 முதல் ‘ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி’ என்று அழைக்கப்படுகிறது.
இத்தகைய பின்னணியில், தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட முன்கூட்டியே தொடங்கிவிட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக, முன்கூட்டியே இன்று மேட்டூர் அணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துள்ளார். சுதந்திர இந்தியாவில் இவ்வளவு முன்கூட்டியே மேட்டூர் அணை திறக்கப்படுவது இதுதான் முதல்முறை. இதுகுறித்து விவசாயிகள் என்ன நினைக்கிறார்கள்? இது டெல்டா விவசாயிகளுக்கு சாதகமா, பாதகமா என்பதைத் தெரிந்து கொள்ள க்ளிக் செய்க…
“காங்கிரஸும், தி.மு.க-வும் ஒடஞ்சி தனித்தனியாப் போகணும்… அதானே…?!”
பேரறிவாளன் விடுதலை விஷயத்தில் திமுகவின் கொண்டாட்டங்களைத் தமிழக காங்கிரஸார் அவ்வளவாக ரசிக்கவில்லை. அதிலும் தன்னை வந்து நேரில் சந்தித்த பேரறிவாளனை, முதல்வர் மு.க. ஸ்டாலின் கட்டி அணைத்தது, அந்தக் கட்சியினரிடையே கசப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ் மேற்கொண்ட கூட்டணிகள், கட்சியை பலவீனப்படுத்தி விட்டதாக அதன் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி இருந்தார். இதனால், ‘திமுக – காங்கிரஸ் கூட்டணி உடையுமா..?’ என்ற அளவுக்கு யூகங்கள் றெக்கை கட்டத் தொடங்கி விட்டன.
டி. ஆருக்கு என்னாச்சு? சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லப்படுகிறாரா..?
கோடம்பாக்கத்தில் நேற்று திடீர் பரபரப்பு. சிலம்பரசனின் தந்தையும், இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார் என்றும், விரைவில் டி.ராஜேந்தர் அமெரிக்காவிற்கோ சிங்கப்பூருக்கோ மேற்சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படுவார் என்றும் தகவல்கள் பரபரத்தன. இதன் உண்மை நிலவரம் என்ன?
“இலங்கைத் தமிழர்களைச் சுரண்டி ஆடம்பரமாக வாழ்பவர் சீமான்!” – காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி காட்டம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை அண்மையில் விமர்சனம் செய்திருந்தார். அதற்குப் பதிலளிக்கும்விதமாக காங்கிரஸ் கட்சியின் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, சீமானுக்கு எதிராகக் கருத்து தெரிவித்து, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதனைச் சீமான் விமர்சித்திருந்தார்.
மறக்கக்கூடியதா விஸ்மயா தற்கொலை சம்பவம்? கேரளாவைக் கலங்கடித்த வழக்கில் தீர்ப்பு!
கேரள மாநிலம் கொல்லம் நிலமேடு பகுதியைச் சேர்ந்தவர் விஸ்மயா(24). பந்தளம் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றுகொண்டிருந்த சமயத்தில் விஸ்மயாவுக்கும், மோட்டார் வாகன ஆய்வாளரான கிரண்குமாருக்கும் திருமணம் நடைபெற்றது. 2020-ம் ஆண்டு மே மாதம் 31-ம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில், வரதட்சணைக் கொடுமையால் 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 21-ம் தேதி கணவர் வீட்டில் பாத்ரூமின் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார் விஸ்மயா.
திருவண்ணாமலை: கற்கால மனிதர்கள் ஆயுதங்களைத் தீட்டிய இடம் கண்டுபிடிப்பு!
குழிகள் யாவும் சராசரியாக 25 செ.மீ நீளமும், 8 செ.மீ அகலமும், 4 செ.மீ ஆழமும் கொண்டு காணப்படுகின்றன. ஒவ்வொரு தொகுப்புக்கும் சராசரியாக 5 குழிகள் வீதம், அந்த இடத்தில் மொத்தம் 15 குழிகள் சிதையாமல் இருந்தது. இந்த இடத்தில் காணப்படும் குழிகளை வைத்துப் பார்த்தால், புதிய கற்காலத்தில் இப்பகுதியில் ஒரு இனக்குழு வாழ்ந்துள்ளதை நம்மால் அறிய முடிகிறது.
இது தொடர்பாக திருவண்ணாமலை மரபுசார் அமைப்பினர் சொல்வது என்ன..?
மகளை வளர்க்க ‘ஆணாக’ மாறிய அம்மா! – கலங்க வைக்கும் பேச்சியம்மாள் கதை…
தூத்துக்குடி மாவட்டம், எப்போதும் வென்றானுக்கு அருகில் உள்ளது காட்டுநாயக்கன்பட்டி கிராமம். முத்து அண்ணாச்சி, முத்து மாஸ்டர், முத்து அண்ணன்… இப்படிச் சொன்னால், சின்னக் குழந்தைகூட அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிடுகிறது. “வீட்டுக்கு வெள்ளை அடிக் கணும்னு சொன்னீயளே..? சப்போர்ட்டுக்கெல்லாம் ஆள் வேணாம், ஒரு ஏணிய மட்டும் ரெடி பண்ணிடுங்க வந்துடுறேன்’’ – கால் மேல் கால் போட்டுக் கொண்டு போனில் பேசிக் கொண்டிருந்த முத்து மாஸ்டர், “யாருப்பு நீங்க, என்ன விஷயம்…” என கணீர் குரலில், வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டே வீட்டிலிருந்து வெளியே வந்தார்.
கழுத்தில் உத்திராட்சக் கொட்டை, வேட்டி, சட்டை, கையில் பீடிக்கட்டு டன் அவரைப் பார்த்தபோது ஆச் சர்யப்பட்டோம். “எம்மா… உன்னை பத்தி தெரிஞ்சுதான் வந்திருக்காக’’ என அவரின் மகள் சண்முக சுந்தரி சொல்ல, “அப்படியா… வீட்டுக்குள்ள வாங்க சார்வாள்” என வேட்டியை கீழே இறக்கிவிட்டு உள்ளே அழைத்துச் சென்றார். சிறிய ஆஸ்பெஸ்டாஸ் வீடு. ‘`பழைய கட்டிலு, துருப்பிடிச்ச பீரோ, டேபிள் பேனு, பத்து பதினஞ்சு சமையல் பாத்திரம், 13 செட் வேஷ்டி, சட்டை, 8 கைலி… இதான் என் சொத்து’’ என்று சிரித்தவர், மோர் கொடுத்தார். துன்பம், திருப்பம், நெகிழ்ச்சி, நம்பிக்கை எனக் கலவையாகப் பயணித்த அவர் கதையைக் கேட்டுமுடித்தபோது, ஒரு கனமான திரைப்படம் பார்த்த உணர்வு.
“என் உண்மையான பேரு பேச்சியம்மாள். செக்காரக்குடி பக்கத்துல உள்ள சொக்கலிங்கபுரம்தான் என் சொந்த ஊரு…