மூன்றாம் தரப்பினரிடமிருந்து பெற்றோலிய பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறிப்பிட்ட சிலர் எரிபொருள் சேகரிப்பில் ஈடுபட்டு, கலப்படம் செய்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான வியாபார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க வேண்டாம் எனவும், அவற்றை உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.