வேடசந்தூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று 100 அடி தூரம் பறந்து சென்று விபத்துக்குள்ளானதில், காரில் பயணம் செய்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சாலையோரம் இருந்த தடுப்புக் கம்பியில் மோதிய கார் ஒன்று, சுமார் 100 அடி தூரம் பறந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.
மதுரையை சேர்ந்த செந்தில் நாதன் என்பவர் தனது மனைவி மற்றும் மகளுடன் ஈரோடு நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளார்.
வேடசந்தூர் அருகே அவரின் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த தடுப்புக் கம்பியில் மோதி, 100 அடி தூரத்துக்கு பறந்து சென்றதாக சொல்லப்படுகிறது.
இதில் கார் கதவு திறந்து செந்தில் நாதனின் மனைவி சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த செந்தில்நாதன் மற்றும் அவரின் மக்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.