கோவை அருகே தொண்டையில் முலாம்பழம் சிக்கிக்கொண்டதால் சிரமம் அடைந்த காவலரை, சக காவலர் காப்பாற்றும் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
கோயமுத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த காவலர் ஒருவர் முலாம்பழம் சாப்பிடும்போது தொண்டையில் சிக்கிக் கொண்டது. தனக்கு உதவி செய்யுமாறு அவர் வேகவேகமாக மற்ற காவலர்களை நோக்கி ஓடி வருகிறார். இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட காவலர் ஒருவர் முதலுதவி அளித்து அவரை காப்பாற்றியுள்ளார்.
இதுகுறித்து வெளியான அதிகாரபூர்வ செய்தியின்படி, காவலர் அபுதாகிர் என்பவர் முலாம் பழம் சாப்பிட்ட போது அது தொண்டையில் சிக்கிக் கொண்டது. இதனை அடுத்து உதவி கேட்டு ஓடி வந்தார். அப்போது அங்கு இருந்த காவல் உதவி ஆய்வாளர் தாமோதரன் அவருக்கு உடனடியாக முதலுதவி வழங்கினார்.
துரிதமாக செயல்பட்ட காவல் உதவி ஆய்வாளர் தாமோதரனுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.