தனுஷ் நடித்து இயக்கும் புதிய படம்
நடிகர் தனுஷ் தற்போது தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்துவருகிறது. இந்த படத்திற்கு பிறகு ஜூலை மாதத்தில் இயக்குனர் அருண்மதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.
இந்நிலையில் தயாரிப்பாளர் மற்றும் பிரபல பைனான்சியர் கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன் தயாரிப்பில் தனுஷ் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை தனுஷே இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .
தனுஷ் நடித்துமுடித்துள்ள திருச்சிற்றம்பலம் , நானே வருவேன் மற்றும் ஹாலிவுட் படமான தி கிரே மேன் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.