தமிழகத்தில் இன்று 14 இடங்களில் வெயில் சதமடித்து உள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்த நிலையில், மீண்டும் வெப்பம் அதிகரித்துள்ளது.
இதைத் தொடர்ந்து இன்று சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அடுத்தபடியாக மதுரை விமான நிலையம், கடலூர், கரூர் பரமத்தியில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
இதைத்தொடர்ந்து வேலூர், திருத்தணியில் 103 டிகிரியும், நுங்கம்பாக்கம், திருச்சி, தஞ்சையில் 102 டிகிரி பாரன்ஹீட்டு்ம், நாமக்கல், ஈரோடு, நாகை, பரங்கிப் பேட்டையில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.