கவனத்தில் கொள்ள வேண்டிய 10 பங்குகள்.. ஏன்.. உங்களுக்கு பிடித்தமான பங்கும் லிஸ்டில் இருக்கா?

நடப்பு ஆண்டு இதுவரையில் முதலீட்டாளர்களுக்கு மிக மோசமான ஒரு ஆண்டாகவே இருந்து வருகின்றது. சென்செக்ஸ், நிஃப்டி என இரண்டு குறியீடுகளுமே 8% அதிகமான சரிவினைக் கண்டுள்ளன.

இதற்கிடையில் பங்கு சந்தையில் முதலீடுகளை செய்யலாமா? வேண்டாமா? ஏனெனில் மிகப் பிரபலமான ப்ளூசிப் பங்குகள் கூட சரிவினைக் கண்டுள்ளன. பல பங்குகள் 52 வார குறைந்தபட்ச விலையில் காணப்படுகின்றன.

இந்த சரிவிலும் கவனிக்க வேண்டிய பென்னி பங்குகள் பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.

ஒரு பங்குக்கு ரூ.30 டிவிடெண்ட் அறிவித்த பார்மா பங்கு.. உங்க போர்ட்போலியோவிலும் இருக்கா?

லாபம் தரக்கூடிய 10 பங்குகள்

லாபம் தரக்கூடிய 10 பங்குகள்

பல பங்குகள் நல்ல எதிர்கால வளர்ச்சி, வருவாய் விகிதம், கடன் உள்ளிட்ட பலவும் சாதகமாக உள்ள நிலையில், அவற்றில் கவனிக்க வேண்டிய பங்குகள் பற்றித் தான் இன்று நாம் பார்க்கவிருக்கிறோம். நீண்டகால நோக்கில் வருமானம் தரக்கூடிய 10 பங்குகள் பற்றித் தான் பார்க்கவிருக்கிறோம்.

புதும்ஜீ பேப்பர்

புதும்ஜீ பேப்பர்

 

புதும்ஜீ பேப்பர் சிறப்பு காகிதங்களை தயாரிக்கும் வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றது. இந்த நிறுவனம் டிஷ்யூ பேப்பர்கள் மற்றும் முகம் துடைக்கும் பேப்பர்களை தயாரிக்கிறது. இது இந்தியாவில் மட்டும் அல்ல, சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளுக்கும் சப்ளை செய்து வருகின்றது. ஐரோப்பா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் தென் கிழக்கு ஆசியா முழுவதும் இருப்பைக் கொண்டுள்ளது.

கொரோனா காராணமாக நிறுவனத்தின் வருவாய் விகிதம் சற்று குறைந்துள்ளது. இது 2023ம் நிதியாண்டில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதால், பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்களுக்கான தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நிறுவனத்தின் வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இண்டர்நேஷனல் கன்வேயர்ஸ்
 

இண்டர்நேஷனல் கன்வேயர்ஸ்

இண்டர்நேஷனல் கன்வேயர்ஸ் பிவிசி கன்வேயர் பெல்ட்களை உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் நிலக்கரி, பொட்டாசியம் மற்றும் சிமெண்ட் போன்ற பலவும் சுரங்கங்களில் பயன்படுத்தப்படுகிறது. இது தவிர 11 Kwh திறன் கொண்ட 5 காற்றாலைகளையும் இந்நிறுவனம் கொண்டுள்ளது. சர்வதேச அளவில் முக்கிய கன்வேயர் பெல்ட்களில் ஒன்றாக இருக்கும் இந்த நிறுவனத்திற்கான தேவை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வலுவான ஆர்டர் புத்தகத்தினை கொண்டுள்ளது. இதன் வருவாய் லாபம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேனன் பிஸ்டன்

மேனன் பிஸ்டன்

மேனன் பிஸ்டன் என்பது பிஸ்டன்கள் போன்ற வாகன உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும் ஒரு துணை நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் உதிரி பாகங்களை ஈச்சர் மோட்டார்ஸ், டாடா மோட்டார்ஸ், மாருதி சுசுகி போன்ற வாகன நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. இந்த நிறுவனம் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வீற்பனை செய்து வருவதால், விற்பனையில் இருந்து வருவாய் ஈட்டி வருகின்றது. கொரோனா காரணமாக கடந்த 3 ஆண்டுகளில் வருவாய் லாபம் சிறிது குறைந்துள்ளது. எனினும் இது கடன் இல்லா நிறுவனமாகும். ஆக வரவிருக்கும் காலாண்டுகளில் நிறுவனத்தின் வளர்ச்சி மேம்படும்போது வருவாய் அதிகரிக்கலாம்.

ஜியோஜித் ஃபைனான்ஷியல் சேவைகள்

ஜியோஜித் ஃபைனான்ஷியல் சேவைகள்

ஜியோஜித் ஃபைனான்ஷியல் நிதி சேவை நிறுவனமாகும். இது ஒரு ஆன்லைன் தரகு, ஆலோசனை போர்ட்போலியோ மேலாண்மை சேவைகள், நிதி தயாரிப்பு, மார்ஜின் வர்த்தகம் என பல சேவைகளை வழங்கி வருகின்றது. இது இந்தியா முழுவதும் 470 கிளை அலுவலகங்களையும்,1 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது. இது ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளிலும் நிதி சேவைகளை இந்தியர்களுக்கு வழங்கி வருகின்றது. கடந்த 3 ஆண்டுகளில் வலுவான வளர்ச்சியினை கண்டுள்ளது. இதுவும் கடன் இல்லாத ஒரு நிறுவனம்.

ஜாக்ரன் பிரகாஷன்

ஜாக்ரன் பிரகாஷன்

ஜாக்ரன் பிரகாஷன் ஒரு ஊடக நிறுவனமாகும். இது பத்திரிக்கைகளை அச்சிட்டு வெளியிடும் ஒரு நிறுவனமாகும். கடந்த சில ஆண்டுகளில் அதன் சேவையை விரிவாக்கம் செய்யும் விதமாக எஃப் எம் ரேடியோ, புரோமோஷனல் மார்கெட்டிங், ஈவன்ட் மேனேஜ்மென்ட், டிஜிட்டல் விளம்பரம் என பலவற்றிலும் நுழைந்துள்ளது. 34 பிரிண்டிங் வசதிகளை கொண்ட இந்த நிறுவனம், 84 மில்லியன் வாசகர்களை கொண்டுள்ளது. 10 பப்ளிகேஷன்கள், 39 ரேடியோ நிலையங்கள், 15 டிஜிட்டல் போர்ட்டல்கள் என பலவற்றையும் கொண்டுள்ளது. கொரோனா காரணமாக வருவாய் குறைந்துள்ள நிலையில், விரைவாக மீண்டு வருகின்றது. இது பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில் விளம்பரம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடோர் ஃபோன்டெக்

அடோர் ஃபோன்டெக்

அடோர் ஃபோன் டெக் வெல்டிங் மின் முனைகள், வெல்டிங் உலோகக் கலவைகள், பீங்கான் குழாய்கள், வெல்டிங் உபகரணங்கள் உள்ளிட்ட பலவற்றை உற்பத்தி செய்து வருகின்றது. மேலும் சுரங்கம், மின்சாரம், எஃகு மற்றும் பெட்ரோலியம், சுத்திகரிப்பு ஆலைகள் போன்ற முக்கிய துறைகளுக்கான இயந்திரங்களையும் இது சரி செய்து வருகின்றது. இது 2 உற்பத்தி ஆலைகளை கொண்டுள்ளது. இதுவும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டு வரத் தொடங்கியுள்ளது. மேலும் தொடர்ந்து நிறுவனம் விரிவாக்க பணிகளையும் தொடர்ந்து வருகின்றது.

முன்ஜால் ஷோவா

முன்ஜால் ஷோவா

முன்ஜால் ஷோவா என்பது வாகன உதிரி பாகங்களை தயாரிக்கும் ஒரு ஆட்டோ துணை நிறுவனமாகும். இந்தியாவில் தற்போது 3 ஆலைகளைக் கொண்டுள்ளது. அதன் வருவாயில் 100% இந்திய சந்தையில் இருந்து பெறுகிறது. தொற்று நோய் காரணமாக வளர்ச்சி சற்று குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டு வரத் தொடங்கியுள்ளது.

குஜராத் பிபாவாவ் துறைமுகம்

குஜராத் பிபாவாவ் துறைமுகம்

குஜ்ராத் பிபாவாவ் துறைமுகம் இந்தியாவின் முதல் தனியார் துறைமுகமாகும். இது இந்தியாவை அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவை மேற்கிலும், மறுபுறம் கிழக்கிலும் இணைக்கிறது,. இது 4 வகையாக சரக்குகளை கையாளுகிறது. ஒன்று கன்டெய்னர், உலர் மொத்த, திரவ மொத்த, ரோல் ஆன் மற்றும் ரோக் ஆப் என சரக்குகளை கையாளுகிறது. கடன் இல்லா நிறுவனமான இது, தொடர்ந்து வளர்ச்சியினை கண்டு வருகின்றது.

ரூப்ஃபிலா இண்டர்நேஷனல்

ரூப்ஃபிலா இண்டர்நேஷனல்

ரூப்ஃபிலா இண்டர்நேஷனல் இந்தியாவின் மிகப்பெரிய வெப்ப எதிர்ப்பு ரப்பர் நூல் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகும். டால்கம் மற்றும் சிலிக்கான் பூசப்பட்ட ரப்பர் நூல்களை உற்பத்தி செய்யும் ஒரே இந்திய நிறுவனமாகும். இது வலுவான தேவை காரணமாக இதன் வளர்ச்சி வலுவாக காணப்படுகின்றது. இது உள்நாட்டில் மட்டுமின்றி ஏற்றுமதியும் செய்து வருகின்றது.

மார்க்சன்ஸ் பார்மா

மார்க்சன்ஸ் பார்மா

இது மருந்து உற்பத்தியில் ஈடுபடும் ஒரு நிறுவனமாகும். இது புற்று நோயியல், காஸ்ட்ரோஎன்டாலஜி, மகளிர் மருத்துவம், நீரிழிவு நோய், நுண்ணுயிர் எதிர்ப்புகள், வலி மேலாண்மை போன்ற பல துறைகளில் பயன்படுத்தும் மருந்துகளில் கவனம் செலுத்துகிறது. இது 80-க்கும் மேற்பட்ட பொருட்களை தனது போர்ட்போலியோவில் கொண்டுள்ளது. இது உள் நாட்டில் சப்ளை செய்வதோடு, 25 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றது. வலுவான வளர்ச்சிக்கு மத்தியில் கடன் இல்லா நிறுவனமாகவும் இருந்து வருகின்றது. இதன் புதிய வெளியீடுகள் வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

The 10 best penny stocks in india to add to your watch list: check details

The current year has been one of the worst for investors so far. Both the Sensex and the Nifty fell more than 8%. In the meantime let’s take a look at the 10 penny stocks to look out for.

Story first published: Tuesday, May 24, 2022, 16:44 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.