நயன்தாராவுக்கு சாப்பாடு ஊட்டிவிடும் விக்னேஷ் சிவன்
விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் ‛காத்துவாக்குல ரெண்டு காதல்' என்ற படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன், அடுத்தபடியாக அஜித்தின் 62வது படத்தை இயக்குவதற்கான ஆரம்பகட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வரும் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் வருகிற ஜூன் மாதம் 9ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
நேற்று நயன்தாராவுடன் இணைந்து தனது குலதெய்வம் கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்திய விக்னேஷ் சிவன், அதுகுறித்த வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது நயன்தாராவுக்கு பிடித்தமான கடல் உணவுகளை அவருக்கு ஊட்டிவிடும் ஒரு வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவுக்கு ரசிகர்களின் லைக்ஸ் மற்றும் கமெண்டுகள் குவிந்து வருகிறது.