பெட்ரோல், டீசல் விலை 40% வரை உயர்வு.. இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை என்ன தெரியுமா..?!

இலங்கை 51 பில்லியன் டாலர் கடனுடனும், கடனுக்கான தவணையைச் செலுத்த முடியாத நிலையில் முதல் முறையாகத் திவாலாகியிருக்கும் நிலையில் தமிழ்நாடு அரசு, இந்திய அரசு உட்பட உலக நாடுகள் அந்நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திச் செய்யும் வகையில் பல உதவிகளை அளித்து வருகிறது.

இந்த நிலையில் நாணய மதிப்புச் சரிவு, எரிபொருள் விலை உயர்வு, எரிபொருள் பற்றாக்குறை எனப் பல பிரச்சனைகள் மத்தியில் எரிபொருளுக்கான தீர்வு காண வேண்டும் என்பதற்காக இலங்கை அரசு பெட்ரோல், டீசல் விலையைத் தாறுமாறாக அதிகரித்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

இன்று இலங்கை அரசின் பவர் மற்றும் எனர்ஜி துறை அமைச்சரான காஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ள அறிவிப்பில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இலங்கை முழுவதும் பெட்ரோல் விலை 20-24 சதவீதமும், டீசல் விலை 35-38 சதவீதமும் உயர்த்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.

கட்டணம், வரி உயர்வு

கட்டணம், வரி உயர்வு

இதைத் தொடர்ந்து அரசுக்குக் கூடுதல் வருமானத்தை ஈட்டவும், எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வைச் சமாளிக்கவும் இலங்கை அரசு போக்குவரத்து மற்றும் இதர அனைத்து சேவை கட்டணங்களும் அதிகரிக்க இலங்கை அரசு திட்டமிட்டு உள்ளதாக டிவிட்டரில் பவர் மற்றும் எனர்ஜி துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகரத் தெரிவித்துள்ளார்.

வொர்க் ப்ரம் ஹோம்
 

வொர்க் ப்ரம் ஹோம்

மேலும் இலங்கையில் எரிபொருள் பயன்பாட்டை நாடு முழுவதும் குறைக்க வேண்டும் என்பதற்காக அனைத்து நிறுவனங்களையும் தங்களது ஊழியர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம் அளிக்க ஊக்குவித்துள்ளது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்க இலங்கை அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு லிட்டர் விலை

ஒரு லிட்டர் விலை

ஏப்ரல் 19ஆம் தேதிக்குப் பின் அறிவிக்கப்படும் இரண்டாவது விலை உயர்வு, இன்றைய விலை உயர்வின் மூலம் இலங்கையில் அதிகம் பயன்படுத்தப்படும் Octane 92 பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 420 ரூபாயும் மற்றும் டீசல் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுதான் இலங்கையின் வரலாற்று உச்ச விலை.

இலங்கை ரூபாய் மதிப்பு

இலங்கை ரூபாய் மதிப்பு

ஆக்டேன் 92 ரகப் பெட்ரோல் விலை 24.3 சதவீதம் அல்லது 82 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 38.4 சதவீதம் அல்லது 111 ரூபாயும் உயர்த்துவதாக இலங்கை அரசின் எரிபொருள் நிறுவனமான சிலோன் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் இன்று அறிவித்துள்ளது.

இந்திய ரூபாய்க்கு எதிரான இலங்கை ரூபாய் மதிப்பு 4.64 ரூபாயாக உள்ளது.

 

தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அரசு

ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு அரசு 5.6 மில்லியன் டாலர் மதிப்பிலான அரிசி, பால் பவுடர், மருந்துகள் எனப் பல அத்தியாவசிய பொருட்களை அளித்த நிலையில், இன்று இந்திய அரசு கூடுதலாக 40000 மெட்ரிக் டன் டீசலை இலங்கைக்கு அனுப்பியுள்ளது, கடந்த மாதம் ஒன்றிய அரசு எரிபொருளுக்காக 500 மில்லியன் டாலர் அளவிலான கடனுக்கு ஒப்புதல் அளித்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Sri Lanka hikes fuel prices today; petrol at all-time high of Rs 420, diesel Rs 400 per litre

Sri Lanka hikes fuel prices today; petrol at all-time high of Rs 420, diesel Rs 400 per litre பெட்ரோல், டீசல் விலை 40% வரை உயர்வு.. இலங்கை ஒரு லிட்டர் பெட்ரோல் விலை என்ன தெரியுமா..?!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.