ரஷ்யா நடத்திவரும் போர் நடவடிக்கை காரணமாக உக்ரைனின் அண்டை நாடான ஹங்கேரியில் அவசரகால நிலை விதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் ரஷ்யா கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக போர் தாக்குதலை நடத்தி வரும் நிலையில், ரஷ்யாவிற்கு எதிராக மேற்கு நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகள் ரஷ்யாவிற்கு மட்டுமில்லாமல் பல உலக நாடுகளுக்கும் பணவீக்கம் மற்றும் உணவுத் தானிய தட்டுபாடு ஆகிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், உக்ரைனின் மிக நெருங்கிய அண்டை நாடான ஹங்கேரியில் புதிய அவசர நிலையை அந்நாட்டு பிரதமர் விக்டர் ஓர்பன் விதித்துள்ளார்.
இதுத் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்தில், ஹங்கேரி இந்தப் போரில் இருந்து விலகி இருக்க வேண்டும், அதுவே ஹங்கேரி குடும்பங்களின் நிதிப் பாதுகாப்பை உறுதிபடுத்தும், அதற்கு ஹங்கேரி அரசாங்கம் உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போது விதிக்கபட்டுள்ள அவசரகால நடவடிக்கை ஹங்கேரி மக்களை உடனடியாகவும் எல்லாச் சூழ்நிலைகளிலும் பாதுகாப்புடன் செயல்பட அனுமதிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி: ராஜஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி
மேலும் கோவிட் தொற்று நோய் தொடர்பான அவசரகால நிலை அடுத்த செவ்வாய்க்கிழமை காலாவதியாக இருந்த நிலையில், இந்த அவசர கால நிலை நீடிக்கப்பட்டுள்ளது.