உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலில் இருந்து ரஷ்யப் படைகள் அனைத்து கண்ணி வெடிகளையும் அகற்றி விட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
உக்ரைனின் முக்கிய துறைமுக நகரான மறியுபோலை ரஷ்யப் படைகள் பல வார முற்றுக்கைக்கு பிறகு தங்களது முழுக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது.
ஆனால் ரஷ்ய படைகளின் இந்த முழுக்கட்டுப்பாட்டிற்கு முன்னதாக, உக்ரைன் தங்களது துறைமுகங்களை பாதுகாப்பதற்காக கண்ணிவெடிகளை அமைத்து இருப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டி இருந்தது.
Reuters
இருப்பினும் ரஷ்யாவின் இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்த உக்ரைன், கண்ணிவெடிகள் தொடர்பான ரஷ்யாவின் கூற்று முற்றிலுமாக தவறானது எனத் தெரிவித்தது.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனின் உணவு தானியங்களை திருடும் ரஷ்யா: அதிர்ச்சி தரும் புதிய செயற்கைக்கோள் புகைப்படங்கள்!
Reuters
இந்தநிலையில், தற்போது ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் உக்ரைனின் அசோவ் கடல் பகுதியின் துறைமுக நகரான மரியுபோலில் இருந்து அனைத்து கண்ணி வெடிகளையும் ரஷ்ய படைகள் அகற்றி விட்டதாக தெரிவித்துள்ளது.