வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நியூயார்க்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பள்ளிக்குள் புகுந்த இளைஞர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் அருகே யுவால்டே கவுண்டி என்ற நகரில் சாண்டி ஹூக் என்ற உயர்நிலை பள்ளி உள்ளது. இங்கு புகுந்த மர்ம நபர் கண்ணில்பட்டவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டான். இதில் 15 பேர் பலியானதாகவும் பலர் காயம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்துள்ளனர்.தகவலறிந்த குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளி முன் குவிந்தனர்.
![]() |
பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகளை மீட்பதற்காக பெற்றோர்கள் பள்ளி வளாகம் அருகே குவிந்துள்ளனர்.
இது குறித்து டெக்சாஸ் மாகாண கவர்னர் கிரேக் அப்போட் கூறியது, இப்பள்ளியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். 18 வயதுடைய இளைஞர் பள்ளிக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளான். இதில் 14 மாணவர்கள், 1 ஆசிரியர் பலியாகியுள்ளனர். துப்பாக்கியால் சுட்ட அந்த இளைஞரை போலீசார் சுட்டுக்கொன்றனர் என்றார்.
Advertisement