சென்னை:
இந்தியாவுக்காக தங்கம் கொண்டு வர முயற்சிப்பேன் என்று குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீன் தெரிவித்துள்ளார்.
இஸ்தான்புல்லில் நடைபெற்ற மகளிர் உலக சாம்பியன்ஷிப் 52 கிலோ ஃப்ளைவெயிட் பிரிவில் இறுதிப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் தாய்லாந்தின் ஜிட்பாங் ஜூடாமாஸை வீழ்த்தி உலக சாம்பியனானார்.
இந்த வெற்றியின் மூலம் உலக சாம்பியன் பட்டம் வென்ற ஐந்தாவது இந்திய குத்துச்சண்டை வீராங்கனை என்ற பெருமையை ஜரீன் பெற்றார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டிற்காக தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஒரு ஆரம்பம் தான். இனி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற கடினமாக உழைக்க போகிறேன். இந்தியாவுக்காக தங்கம் கொண்டு வர முயற்சி செய்வேன் என்று கூறினார்.