சென்னை:
பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்க பிரதமர் நாளை சென்னை வருகை தருகிறார்.
ஒருநாள் பயணமாக சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் அமைக்கப்படும் விழா மேடையிலிருந்து பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கிறார்.
எழும்பூா் ரயில் நிலையம் முழுமையாக உலகத்தரம் வாய்ந்த நிலையமாக மறு சீரமைப்பு செய்யப்படவுள்ளது. இதன்பொருட்டு ரூ.760 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டுகிறாா். இதுபோல, மதுரை, காட்பாடி, ராமேசுவரம், கன்னியாகுமரி ஆகிய ரயில் நிலையங்களும் மேம்படுத்தப்படவுள்ளன. இவற்றின் திட்டப்பணிகளையும் அவர் தொடங்கிவைக்கிறாா்.
மதுரை-போடிநாயக்கனூா் இடையே ரூ.450 கோடி செலவில் 98 கி.மீ. தூர மீட்டா் கேஜ் பாதை, அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில், மதுரை-தேனி வரை அகல ரயில் பாதைப் பணிகள் முடிந்து அதிவேக ரயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து, மதுரை-தேனி இடையே ரயில் சேவை தொடங்கவுள்ளது.
இந்தப் பாதையை பிரதமா் மோடி நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா். தொடா்ந்து, இந்தப் பாதையில் ரயில்சேவையும் அவர் தொடங்கி வைப்பார். தாம்பரம்-செங்கல்பட்டு 3-ஆவது ரயில் பாதையிலும் அவர் ரயில் சேவையைத் தொடங்கி வைக்கிறார்.