தேசம் என்பது மேற்கத்திய கருத்தாக்கம் – 'கார்னர்' செய்த அதிகாரிக்கு ராகுல் காந்தி பதிலடி

“தேசம் என்பது மேற்கத்திய கருத்தாக்கம் இந்தியா வெகு நிச்சயமாக மாநிலங்களின் ஒன்றியம்” தான் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.

பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கிறிஸ்டி கல்லூரியில், `இந்தியா 75′ என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதில் பல்வெ ராகுல் காந்தி, பேசியவை அனைத்தும் கவனம் பெற்று வருகின்றன.

இந்நிலையில், ராகுல் காந்தியிடம் இந்தியாவைச் சேர்ந்த சிவில் சர்வீஸ் அதிகாரி ஒருவர் ஒரு வாதத்தை முன்வைத்தார். சித்தார்த் வர்மா என்ற அந்த நபர் இந்திய ரயில்வே ட்ராஃபிக் சர்வீஸ் பிரிவில் அதிகாரியாக உள்ளார். அவர் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பப்ளிக் போலீஸ் துறையின் காமன்வெல்த் அறிஞரும் கூட.

ராகுலுக்கு அவர் முன்வைத்த கேள்வியில், “நீங்கள் இந்திய அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 1ஐ மேற்கொள்ள் காட்டி, பாரதம் என்பது மாநிலங்களின் ஒன்றியல் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அரசியல் சாசனத்தில் நீங்கள் கூறியது உள்ள பக்கத்தின் அடுத்த பக்கத்தை திருப்பிப் பாருங்கள். அதில் அரசியல் சாசனத்துக்கான முன்னுரை இருக்கும். அதில், இந்தியா ஒரு தேசம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாரதம், பழமையான நாகரிகம். பாரதம் என்ற பெயர் வேதங்களில் இருந்து வந்தது. தக்சசீலத்தில் மாணவர்களுடன் சாணக்கியர் பேசும்போது கூட, அவர்கள் (மாணாவர்கள்) வெவ்வேறு குழுக்களில் இருந்து வந்திருக்கலாம். ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே தேசத்தைச் சேர்ந்தவர்கள். அது தான் பாரத தேசம்” என்றார்.

அதற்குப் பதிலளித்த ராகுல், சாணக்கியர் தேசம் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தினாரா அல்லாதுர் ராஷ்டிரம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தினாரா? ராஷ்டிரம் என்றால் ராஜ்ஜியம் என்றே அர்த்தம் என்றார். அதற்கு அந்த அதிகார் இல்லை ராஷ்டிரம் என்றால் சமஸ்கிருதத்தில் தேசம் என்று வாதிட்டார். அதற்கு ராகுல் காந்தி தேசம் என்பதே மேற்கத்திய கருத்தாக்கம் என்று கூறி வாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

விவாத வீடியோ:

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.