கடந்த சில வாரங்களாகவே பல்வேறு நிறுவனங்களும் தொடர்ந்து டிவிடெண்ட் பற்றிய அறிவிப்பினை கொடுத்து வருகின்றன. இதுவே இந்த நெருக்கடியான காலகட்டத்திலும் கூட பல பங்குகள் ஏற்றம் காண வழிவகுத்துள்ளது.
அதானி குழும பங்குகளை பொறுத்தவரையில் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த நிலையில், கடந்த சில வாரங்களாகவே மீண்டும் சரிவினைக் காணத் தொடங்கியுள்ளன.
இது ஓவர் வேல்யூ ஆக இருக்கலாம். ஏற்கனவே இந்த பங்குகள் நல்ல ஏற்றம் கண்டு விட்டன. ஆக முதலீட்டாளர்கள் புராபிட் புக்கிங் செய்யலாம். இதனால் அதானி குழும பங்குகள் விலை குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் சமீபத்திய அறிக்கையில் கூறியிருந்தனர்.
மத்திய அரசின் ஸ்வீட்டான அறிவிப்பு.. சர்க்கரை விலை குறையலாம்.. ஏற்றுமதியாளர்களுக்கு பிரச்சனையே.!
டிவிடெண்ட் அறிவிப்பு
இதற்கிடையில் அதானி குழுமத்தினை சேர்ந்த மிகப்பெரிய நிறுவனமான அதானி போர்ட் மற்றும் ஸ்பெஷல் எக்கானமிக் ஜோன் லிமிடெட் நிறுவனம், அதன் முதலீட்டாளர்களுக்கு விரைவில் டிவிடெண்ட் பற்றிய இறுதி அறிவிப்பினை கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிவிடெண்ட் விகிதமானது 250% அல்லது ஒரு பங்குக்கு 5 ரூபாய் டிவிடெண்டினை அறிவித்துள்ளது.
ஒப்புதல் எப்போது?
இது குறித்து நிறுவனம் பங்கு சந்தைக்கும் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. எனினும் இது குறித்தான முழுமையான ஒப்புதல் இந்த நிறுவனத்தின் வருடாந்திர குழு கூட்டத்தில் வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகே எப்போது வழங்கப்படலாம் என்ற அறிவிப்பும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
லாபம் எவ்வளவு?
கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4வது காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகரலாபம் 21% சரிவினைக் கண்டு, 1024 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. லாபம் குறைந்திருந்தாலும் வருவாய் விகிதமானது 6% அதிகரித்து, 3845 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. எபிட்டா விகிதமானது 19% சரிவினைக் கண்டு, 1858.8 கோடி ரூபாயாகவும் உள்ளது. அதானி போர்ட்ஸ் ஒரு ஒருங்கிணைந்த லாகிஸ்டிக்ஸ் நிறுவனமாகும்.
இன்றைய பங்கு விலை நிலவரம்?
நிறுவனம் லாபத்தில் இருந்தாலும், கடந்த ஆண்டினை காட்டிலும் சரிவினைக் கண்டுள்ள நிலையில், இதன் பங்கு விலையானது11.55 மணி நிலவரப்படி என் எஸ் இ-யில் 5.07% சரிவினைக் கண்டு, 714.10 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதே பி எஸ் இ-யில் இப்பங்கின் விலையானது 4.99% சரிவினைக் கண்டு 714.30 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் 52 வார உச்ச விலை 924.65 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 638 ரூபாயாகும்.
Adani ports recommends dividend at 250% for FY22: do you have this stock?
Adani Port & Special Economic Zone Limited has announced a dividend of 250% or Rs 5 per share to its investors. A final announcement is expected soon.