உலகின் முன்னணி சமூகவலைத்தள நிறுவனமான ஸ்னாப்சாட் நிறுவன பங்குகள் செவ்வாய்க்கிழமை அமெரிக்கப் பங்குச்சந்தை வர்த்தகத்தில் 41 சதவீதம் வரையிலான சரிவை எதிர்கொண்டு உள்ளது.
இதன் வாயிலாக அமெரிக்கச் சந்தையில் இருக்கும் பிற சமுக வலைத்தள நிறுவனங்கள் ஒரு நாள் வர்த்தகத்தில் 200 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டை எதிர்கொண்டு பங்கு முதலீட்டாளர்களைக் கதர விட்டு உள்ளது.
ஒரு பங்குக்கு ரூ.30 டிவிடெண்ட் அறிவித்த பார்மா பங்கு.. உங்க போர்ட்போலியோவிலும் இருக்கா?
பேஸ்புக் தப்பித்தது
2022ஆம் ஆண்டுத் துவக்கத்தில் பேஸ்புக் தனது வாடிக்கையாளர்களை மார்ச் காலாண்டில் இழக்கக் கூடும் என அறிவித்த பின்பு மிகப்பெரிய சரிவை எதிர்கொண்டு பேஸ்புக்-ன் மெட்டா பங்குகள் அதிகளவிலான விற்பனையை எதிர்கொண்டது. ஆனால் மார்ச் காலாண்டில் இந்தப் பிரச்சனையில் இருந்து தப்பித்துச் சிறப்பான காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
ஸ்னாப்சாட் சிக்கியது
இந்நிலையில் மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் சேவைக்குச் சக போட்டி நிறுவனமாக விளங்கும் ஸ்னாப்சாட் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் வேளையில் வருவாய், லாபம் ஆகியவை குறையும் எனக் கணித்துள்ளது. இந்தச் செய்து அமெரிக்கப் பங்குச்சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
இவான் ஸ்பீகல்
இதுக்குறித்து ஸ்னாப்சாட் கூறுகையில் பணவீக்கம், வட்டி விகித உயர்வு, சப்ளை செயின் பாதிப்பு, ஊழியர்கள் வெளியேற்றம் மற்றும் பற்றாக்குறை, கொள்கை மாற்றங்கள், உக்ரைன் போர் எனப் பல பிரச்சனைகளில் சிக்கியுள்ளோம் என ஸ்னாப்சாட் நிறுவன சிஇஓ இவான் ஸ்பீகல் தெரிவித்துள்ளார்.
ஸ்னாப்சாட் பங்குகள்
இதன் எதிரொலியாக ஸ்னாப்சாட் நிறுவன பங்குகள் 22.49 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில் 41 சதவீதம் வரையில் சரிந்து புதன்கிழமை 12.79 டாவர் வரையில் சரிந்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு மிகப்பெரிய சரிவை எதிர்கொண்டு உள்ளது.
சமூகவலைத்தள நிறுவனங்கள்
ஸ்னாப்சாட் நிறுவனத்தின் சரிவால் பிற சமூகவலைத்தள நிறுவனங்களும் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டது. இதன் வாயிலாகச் சமுக வலைத்தள நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் மட்டும் சுமார் 200 பில்லியன் டாலர் அளவிலான சந்தை மதிப்பீட்டை இழந்துள்ளது.
200 பில்லியன் டாலர்
சமூகவலைத்தள பிரிவில் இருக்கும் பேஸ்புக்-ன் மெட்டா பிளாட்பார்ம்ஸ், Pinterest, டிவிட்டர் மற்றும் ஆல்பபெட் ஆகிய நிறுவன பங்குகளின் விலை 7 முதல் 24 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இதன் வாயிலாகவே சமூகவலைத்தள நிறுவனங்கள் 200 பில்லியன் டாலர் அளவிலான சந்தை மதிப்பீட்டை இழந்துள்ளது.
Snapchat shares crash 41 percent in single day; Social media cos MCAP falls $200 billion
Snapchat shares crash 41 percent in single day; Social media cos MCAP falls $200 billion ஸ்னாப்சாட் பங்குகள் ஓரே நாளில் 40% சரிவு.. சோஷியல் மீடியா நிறுவனங்களுக்கு $200 பில்லியன் இழப்பு..!