சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு வரி விலக்கு; விலை குறையும் வாய்ப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: சமையல் எண்ணெய் இறக்குமதிக்கான சுங்க வரி மற்றும் கூடுதல் வரி ஆகியவற்றுக்கு மத்திய அரசு ஓராண்டு விலக்கு அளித்துள்ளது.

சமையல் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த, சூரிய காந்தி எண்ணெய் மற்றும் சோயா எண்ணெய் ஆகியவற்றை அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை, ஆண்டுக்கு தலா 20 லட்சம் டன் இறக்குமதி செய்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

latest tamil news

மேலும், இறக்குமதிக்கான சுங்க வரி மற்றும் கூடுதல் வரி ஆகியவற்றையும் ரத்து செய்துள்ளது. இதனால், சமையல் எண்ணெய் விலை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.