Jr.NTR: ராஜமௌலியின் பேவரைட் சாய்ஸ்; ஷங்கரின் நெக்ஸ்ட் ஹீரோ!|Visual Story

பேன் இந்தியா ஸ்டாரான ஜூனியர் என்.டி.ஆர் பிறந்தநாள் இன்று. ஆந்திராவின் பிரபல அரசியல் குடும்பத்தின் வாரிசு. Jr.NTR சுருக்கமாக `தாரக்’ பின்னர் தாத்தாவின் பெயராலே அழைக்கப்பட்டார்.

தாத்தா என்.டி.ஆர் இயக்கிய படத்தில் 7 வயதில் திரையில் தோன்றியவர் ஜூனியர் என்.டி.ஆர். அதன் பிறகு தேசிய விருது பெற்ற ‘பால ராமாயணம்’ படத்தில் ராமராக நடித்தார்.

ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடித்த முதல் படம் அவரது 17 வயதில் வெளியாகிறது. எஸ்.எஸ்.ராஜமௌலியின் முதல் படமான ‘ஸ்டூடன்ட் நம்பர் 1’ படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் தான் ஹீரோ.

ராஜமௌலி – ஜூனியர் என்.டி.ஆர் நட்பு அங்கிருந்து தொடங்கியது. ‘ஸ்டூடன்ட் நம்பர் 1’, ‘சிம்ஹத்ரி’, ‘எமதொங்கா’, ‘RRR’ என நான்கு படங்கள் இருவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றியுள்ளனர். ஜூனியர் என்.டி.ஆர் ட்விட்டரில் பின்தொடரும் ஒரே நபர் ராஜமௌலி தான்.

தெலுங்கு ரசிகர்களின் கிரேஸ் ஐகான் இவர். 2004-ல் வெளிவந்த ‘ஆந்திராவாலா’ படத்தின் ஆடியோ வெளியீட்டுக்கு 10 இலட்சம் பேர் கலந்து கொண்டனர். இதற்காக 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது பக்கா மாஸ் சம்பவம் !

வெகுளியான நடிப்பின் வழியாக பலரையும் ஈர்த்த ஜூனியர் என்.டி.ஆர் முறையாக குச்சிப்புடி நடனம் பயின்றவர்.

என்.டி.ஆர் டான்ஸ் ஆடும்போது திரையரங்கமே ஆடும். அதற்கு பல பாடல்கள் உதாரணம் உண்டு. சமீத்திய உதாரணம், ‘நாட்டு நாட்டு’. நடனத்தில் மட்டுமல்லாது ஆறேழு பாடல்களையும் பாடியிருக்கிறார். Chubby cheeks, Dimple Chin, curly hair என என்.டி.ஆர் பப்லியாக இருந்தகாலம் போய், ‘அரவிந்த சமேத வீரராகவா’ படத்தில் மெர்சலான சிக்ஸ் பேக் வைத்து அதற்காக வெறும் உடம்பில் பவர்ஃபுல்லான ஸ்டன்ட் வைத்து அவரது ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸ் வர செய்தார், இயக்குநர் த்ரிவிக்ரம் ஶ்ரீநிவாஸ்.

ஜூனியர் என்.டி.ஆரின் 30-வது படத்திற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. பேன் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தை இயக்குநர் கொரட்டாலா சிவா இயக்குகிறார். இந்த கூட்டணியில் ஏற்கெனவே, ‘ஜனதா கேரேஜ்’ என்ற சூப்பர்ஹிட் படம் வெளியாகியிருக்கிறது.

அதற்கடுத்து ‘கே.ஜி..எஃப்’ இயக்குநர் பிரசாந்த் நீல், இயக்குநர் ஷங்கர் இயக்குகிற படங்கள் என பெரியப்பெரிய ப்ராஜெக்ட்டுகள் லைன் அப்பில் இருக்கின்றன.

‘RRR’ படத்திற்குப் பிறகு, இந்தியளவில் கொண்டாடப்படுகிற பேன் இந்திய நடிகர்களுக்கான சர்வேயில் முதலிடம் பிடித்திருக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர்.

தெலுங்கில் சக்கைப்போடு போட்ட, விஜய் சேதுபதி வில்லனாகக் கலக்கிய `உப்பென்ன’பட இயக்குநரின் அடுத்த பட ஹீரோ இவர்தான்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.