ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்ற பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய ஏழு பேரும் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
7 பேரை விடுதலை செய்ய கோரி தமிழக அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தனர். இதனிடையே 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன், தன்னை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது விசாரணை நடைபெற்றது, அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், பேரறிவாளன் விடுதலை செய்வது தொடர்பான வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அந்த தீர்ப்பில், 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த நிலையில் பேரறிவாளனை விடுவித்தது உச்சநீதிமன்றம். அரசியல் அமைப்பு சட்டத்தின் 142வது அதிகாரத்தின் கீழ் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், பேரறிவாளன் போல தன்னையும் விடுவிக்க கோரி, மதுரை மத்திய சிறையில் உள்ள ரவிச்சந்திரன் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் எனக்கு கடிதம் எழுதி உள்ளார்.