சென்னை, பெங்களூரு தான் பெஸ்ட்.. ஏன் எதற்காக தெரியுமா?

நம்மில் பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான கனவு சொந்த வீடு. ஏன் இது பலருக்கும் ஒரு வாழ் நாள் கனவாகவே இருக்கும். குறிப்பாக சென்னை போன்ற பெரு நகரங்களில் வசிப்பவர்களுக்கு, இது அவர்களின் வாழ் நாள் குறிக்கோளாகவே இருக்கும். ஏனெனில் அந்தளவுக்கு இன்றைய காலகட்டத்தில் பெரு நகரங்களில் வீடுகளுக்கான வாடகை விகிதம் மிக அதிகம்.

பாகிஸ்தான் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி.. இந்தியாவை விட 3 மடங்கு அதிகம்..!

அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு வீட்டிற்கு குறைந்தபட்சம் சுமார் 7000 – 10000 ரூபாயாவது கொடுக்க வேண்டியுள்ளது.

வாடகை கொடுக்கும் காசு இருந்தாலே, இங்கு பலரும் சொந்த வீடு கட்டிக் கொள்ளலாம். அந்தளவுக்கு வாடகை விகிதம் தொடர்ந்து எகிறி வருகின்றது.

வீடுகள் விலை அதிகரிப்பு

வீடுகள் விலை அதிகரிப்பு

இப்படி கனவுகளுடன் வாடகை கொடுத்து வரும் மக்களுக்கு, இன்னொரு அதிர்ச்சி காத்துக் கொண்டுள்ளது என்று தான் கூற வேண்டும். அது சென்னை உள்ளிட்ட 8 முக்கிய நகரங்களில் வீடு விலை அதிகரித்துள்ளது. இன்னும் விலை அதிகரிக்க போகிறது என்பது தான். கடந்த ஜனவரி – மார்ச் காலாண்டில் சென்னை உள்ளிட்ட 8 முக்கிய நகரங்களிலும் வீடுகளின் விலையானது 11% வரையில் அதிகரித்துள்ளதாக CREDAI, Colliers மற்றும் Liases Foras அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.

ராக்கெட் வேகத்தில் அதிகரிப்பு

ராக்கெட் வேகத்தில் அதிகரிப்பு

இது மூலதன பொருட்கள் விலையானது அதிகரித்துள்ள நிலையில், கட்டுமான செலவினங்கள் அதிகரித்துள்ளது. இதனால் டெவலப்பர்கள் வீட்டின் விலையை அதிகரிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். பல நகரங்களில் தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், விலையானது ராக்கெட் வேகத்தில் அதிகரித்துள்ளது.

 தலை நகரில் என்ன நிலவரம்?
 

தலை நகரில் என்ன நிலவரம்?

இந்தியாவில் சராசரியாக கடந்த ஆண்டினை காட்டிலும் வீடு விலையானது 4% அதிகரித்துள்ளது. இது நாட்டின் தலை நகரான டெல்லியில் வீடுகளின் விலையானது மிக அதிகளவில் 11% வரையில் உயர்ந்துள்ளதாக தரவுகள் மூலம் அறிய முடிகிறது. இது சதுர அடிக்கு 7363 ரூபாய் என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. இதே ஹைத்ராபாத்தில் 9% அதிகரித்து வீடுகளின் விலையானது சதுர அடிக்கு, 9232 ரூபாய் என்ற லெவலுக்கு அதிகரித்துள்ளது.

 சென்னை பெங்களூரில் என்ன நிலவரம்?

சென்னை பெங்களூரில் என்ன நிலவரம்?

இதே அகமதாபாத்தில் 8% அதிகரித்து, சதுர அடிக்கு 5721 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 6% அதிகரித்து, சதுர அடிக்கு 6245 ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதே புனேவில் 3% அதிகரித்து, 7485 ரூபாயாகவும், இதே பெங்களூரு, சென்னை மற்றும் மும்பையில் தலா 1% அதிகரித்து, முறையே சதுர அடிக்கு 7595, 7107, 19,557 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

 இன்னும் அதிகரிக்கலாம்.?

இன்னும் அதிகரிக்கலாம்.?

Colliers India-ன் தலைமை செயல் அதிகாரியான ரமேஷ் நாயர் அடுத்து வரும் 6 – 9 மாதங்களில் வீடுகளின் விலையானது 5 – 10 அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில்; ETல் வெளியான செய்தியொன்றில், சர்வதேவ அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் சப்ளை பிரச்சனை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மூலதன பொருட்கள் விலை அதிகரித்துள்ளது. இது வீடுகளின் கட்டமைப்பு செலவினை அதிகரிக்கலாம். குறிப்பாக இரும்பு, சிமெண்ட், அலுமினியம், பிவிசி விலைகள் 30 – 100% வரையில் விலை அதிகரித்துள்ளது.

ஸ்ரீ ராம் பிராபர்டீஸ்

ஸ்ரீ ராம் பிராபர்டீஸ்

இதனால் எதிர்கால திட்டங்களுக்கான செலவுகளும் அதிகரிக்கும். இது 10 – 15% விலை அதிகரிப்பினை எதிர்பார்க்கிறோம் என ஸ்ரீராம் பிராபர்டீஸ் இயக்குனர் எக்னாமிக் டைம்ஸ்-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து Brigade Group அறிக்கையில், வீடுகளின் தேவையானது 5 – 10% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் வீடுகளுக்கான தேவையானது 33 – 38% அதிகரித்தது. இது கொரோனாவுக்கு முந்தைய காலத்தினை விட வளர்ச்சி கண்டது என கூறியிருந்தது.

கிரிசில் மதிப்பீடு

கிரிசில் மதிப்பீடு

இதற்கிடையில் கிரிசில் ஆய்வறிக்கையானது நடப்பு ஆண்டில் 6 நகரங்களில் வீடுகளின் விலையானது ரியல் எஸ்டேட் விலையானது 6 – 10% அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளது. இது மூலதன பொருட்கள் விலை அதிகரிப்பால், தேவை அதிகரிப்பால் இருக்கலாம் என கூறியிருந்தது. இது டெவலப்பர்கள் ஒரு காலாண்டுக்கு 2% விலையினை அதிகரிக்கலாம் எனவும் கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Housing prices rise up to 11% in these 8 cities: What is the situation in Chennai?

Housing prices have risen by 11% in eight cities, including Chennai. Prices are also expected to rise further.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.