குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல் வளைகுடா நாடாக ஐக்கிய அரபு இராச்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
செக் குடியரசு மற்றும் ஸ்லோவேனியாவில் நேற்று(24) முதலாவது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, அத்துடன் ஆப்பிரிக்கா நாட்டிற்கு வெளியில் பரவியுள்ள வைரசினை கண்டறிய 18 நாடுகள் இணைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் மேற்கு ஆப்பிரிக்காவில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த பயணி ஒருவரின் மூலமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் பரவியதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .மேலும் அங்குள்ள அதிகாரிகள் எந்தவொரு தொற்று பரவலை கையாள்வதற்கு முழுமையாக தயாராக உள்ளதாகவும் நோயைக் கண்டறிவதற்கான ஆரம்ப கண்காணிப்பு நெறிமுறைகள் நடைமுறையில் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது தொற்று அபாயம் குறைவாக இருப்பதாகவும் எதிர்காலத்தில் அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஐரோப்பா, அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நோயின் அறிகுறிகளாக காய்ச்சல், தலைவலி, உடல் வலி மற்றும் சோர்வு ஏற்படும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.