5 மாதத்தில் 41% சரிவு.. ஏமாற்றம் தந்த ஐடி நிறுவனங்கள்.. இனி எப்படியிருக்கும்.. சரியான வாய்ப்பா?

கொரோனாவின் வருகைக்கு பின்னர் ஐடி துறையானது பலமான வளர்ச்சியினை கண்டு வந்தன. எனினும் தற்போது வளர்ச்சியுடன் பற்பல சவால்களையும் எதிர்கொண்டு வருகின்றன. குறிப்பாக பங்கு சந்தையில் ஐடி பங்குகள் பெரும் சரிவினை கண்டு வருகின்றன.

குறிப்பாக மார்ச் காலாண்டில் ரஷ்யா – உக்ரைன் பிரச்சனைக்கு இடையே, ஐடி பங்குகள் பெரும் சரிவினைக் கண்டுள்ளன.

கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து இந்திய சந்தையில் இருந்து அன்னிய முதலீடுகள் வெளியேறி வருகின்றன. இதன் காரணமாக இந்திய சந்தையானது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பார்க்கும்போது சுமார் 8% சரிவிலேயே காணப்படுகின்றது.

ஸ்னாப்சாட் பங்குகள் ஓரே நாளில் 40% சரிவு.. என்ன நடந்தது தெரியுமா..?

ஐடி குறியீடுகள் பலத்த சரிவு

ஐடி குறியீடுகள் பலத்த சரிவு

குறிப்பாக ஐடி குறியீடானது 25% சரிவினைக் கண்டு அல்லது 9524 புள்ளிகள் சரிவில் காணப்படுகிறது. இதே சென்செக்ஸ் 7.44% அல்லது 4336 புள்ளிகள் சரிவினைக் கண்டுள்ளது. இதே காலகட்டத்தில் நிஃப்டி ஐடி குறியீடானது 37,071 புள்ளிகளில் இருந்து, 27,708 புள்ளிகளாக சரிவினைக் கண்டுள்ளது. இது 25.25% அல்லது 9363 புள்ளிகள் சரிவினைக் கண்டுள்ளது.

முதலீடுகள் வெளியேற்றம்

முதலீடுகள் வெளியேற்றம்

அன்னிய முதலீட்டாளர்கள் இந்த ஆண்டில் 1.60 லட்சம் கோடி பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர். குறிப்பாக ஐடி பங்குகளில் பெரியளவிலான முதலீடுகள் வெளியேறி இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி விகிதமானது மெதுவாக உள்ள நிலையில். நிறுவனங்களின் வருவாய் விகிதம் குறையத் தொடங்கியுள்ளது. நிறுவனங்களின் மார்ஜின் விகிதம் பாதிக்க தொடங்கியுள்ளது. இதனால் நிறுவனங்களின் அவுட் லுக் என்பது சற்று நிலையற்றதாகவும் உள்ளது.

மோசமான சரிவில் ஐடி பங்குகள்
 

மோசமான சரிவில் ஐடி பங்குகள்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து டெக் மகேந்திரா, டிசிஎஸ், ஆரக்கிள், விப்ரோ உள்ளிட்ட பல ஐடி பங்குகளும், 41.46% வரையில் சரிவினைக் கண்டுள்ளன.

நடப்பு ஆண்டில் டெக் மகேந்திரா 41.46% சரிவிலும், விப்ரோ 37.67% சரிவிலும், சியன்ட் 26.98% சரிவிலும், ஹெச் சி எல் டெக்னாலஜி 26.24% சரிவிலும், இன்ஃபோசிஸ் 24.84% சரிவிலும், ஆரக்கிள் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் 21.45% சரிவிலும், ஜஸ்ட் டயல் 18.89%மும், டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் 14.42% சரிவிலும் காணப்படுகின்றன.

இன்றைய நிலவரம் என்ன?

இன்றைய நிலவரம் என்ன?

இன்றைய பங்கு சந்தை அமர்வில் 3 மணி நிலவரப்படி, டெக் மகேந்திரா 3.86% சரிவினைக் கண்டு, 1055.70 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.

விப்ரோ பங்கின் விலையானது 3.39% சரிவினைக் கண்டு, 444.40 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் 52 வார குறைந்தபட்ச விலையும், இன்றைய குறைந்த பட்ச விலையும் 443.20 ரூபாயாகும்.

சியன்ட் பங்கின் விலையானது 4.09% சரிவினைக் கண்டு, 746.25 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் 52 வார குறைந்தபட்ச விலையும், இன்றைய குறைந்த பட்ச விலையும் 727.45 ரூபாயாகும்.

ஹெச் சி எல் டெக்னாலஜி பங்கின் விலையானது 1.98% சரிவினைக் கண்டு, 972.15 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.

இன்ஃபோசிஸ் பங்கின் விலையானது 2.23% சரிவினைக் கண்டு, 1408.55 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.

 

ஆரக்கிள் ஃபைனான்ஷியல் சர்வீசஸ் பங்கின் விலையானது 2.91% சரிவினைக் கண்டு, 3081 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் 52 வார குறைந்தபட்ச விலையும், இன்றைய குறைந்தபட்ச விலையும் 3066 ரூபாயாகும்.

ஜஸ்ட் டயல் பங்கின் விலையானது 3.67% சரிவினைக் கண்டு, 658.75 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.

டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் பங்கின் விலையானது 3.85% சரிவினைக் கண்டு, 3161.45 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.

இனியும் வாங்கலாமா?

இனியும் வாங்கலாமா?

ஐடி பங்குகளை பொறுத்தவரையில் நிறுவனங்கள் தற்போது மெதுவான வளர்ச்சியினையே காணத் தொடங்கியுள்ளன. அதோடு டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பும் வரலாறு காணாத சரிவில் காணப்படுகிறது. ஆக இது இன்னும் தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடும். எனினும் ஒவ்வொரு நிறுவனங்களின் ஒப்பந்த விகிதம், மார்ஜின் என பலவற்றை பொறுத்தும் மாறுபடலாம். ஆக மேற்கண்ட இந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்கும் முன்பு நன்கு ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது

 

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

IT shares plunged up to 41% in 2022 amid slowdown: is it a right time to invest?

Many IT stocks, including Tech Mahindra, TCS, Oracle and Wipro, have fallen 41.46% since the beginning of the current year.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.