சியோமி
நிறுவனத்தின் பிராண்டான
ரெட்மி
பயனர்களுக்கு பட்ஜெட் முதல் உயர்ரக பட்ஜெட் ரேஞ் வரை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவருகிறது. இந்த ஸ்மார்ட்போன்களில் பல திறன் வாய்ந்த அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு போன்களிலும், மீடியாடெக் டிமென்சிட்டி 8100 5ஜி புராசஸர், 144Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே, 5ஜி இணைப்பு போன்ற சிறப்பம்சங்கள் உள்ளது.
Redmi
Note 11T Astro Boy Edition எனும் சிறப்புப் பதிப்பையும் குறைந்த அளவில் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Telecom: சிம்கார்டு வாங்க இனி ரூ.1 செலுத்தினால் போதும் – புதிய விதிமுறைகள் அமல்!
ரெட்மி நோட் 11டி ப்ரோ+, ரெட்மி நோட் 11டி ப்ரோ விலை
ரெட்மி நோட் 11டி ப்ரோ+ அடிப்படை மாடலான 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மெமரியின் விலை CNY 2,099 (சுமார் ரூ.24,400) ஆக உள்ளது. 8ஜிபி + 256ஜிபி வேரியண்டின் விலை CNY 2,299 (சுமார் ரூ.26,800) ஆகவும், 8ஜிபி + 512ஜிபி மேம்பட்ட பதிப்பு CNY 2,499 (சுமார் ரூ.29,100) ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ரெட்மி நோட் 11டி ப்ரோ போனின் 6ஜிபி + 128ஜிபி வேரியண்ட் CNY 1,799 (சுமார் ரூ.20,900) ஆகவும், 8ஜிபி + 256ஜிபி வேரியண்ட் CNY 1,899 (சுமார் ரூ.23,300) ஆகவும், டாப் வேரியண்டான 8ஜிபி + 256ஜிபி வேரியண்ட் CNY 2,099 (சுமார் ரூ.25,600) ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Redmi Note 11T Pro+, Redmi Note 11T Pro ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஆட்டம் சில்வர், மிட்நைட் டார்க்னஸ், டைம் ப்ளூ ஆகிய நிறங்களில் கிடைக்கின்றன. மே 31 முதல் இந்த போனின் விற்பனை சீனாவில் தொடங்குகிறது.
மேலும், Redmi Note 11T Astro Boy Limited பதிப்பு, 8GB + 256GB மெமரி கொண்டு CNY 2,499 (சுமார் ரூ.29,100) விலையில் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது. இதில் வெறும் 10,000 யூனிட்கள் மட்டுமே விற்பனைக்கு வைக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
Xiaomi Mi Band: விற்பனையில் புரட்சி செய்த Mi பேண்டின் அடுத்த மாடல் ரிலீஸ்!
ரெட்மி நோட் 11டி ப்ரோ சீரிஸ் அம்சங்கள் (Redmi Note 11T Pro Specifications)
இந்த ஸ்மார்ட்போனில் 6.6″ இன்ச் டிஸ்ப்ளே 144Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது. மேலும், HDR10 ஆதரவு, DCI-P3 கலர் கேமட் போன்ற ஆதரவும் உள்ளது. கூடுதல் தெளிவுத் திறனுக்காக டால்பி விஷனும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான MIUI 13 ஸ்கின் இதில் நிறுவப்பட்டுள்ளது. திறன்வாய்ந்த மீடியாடெக் டிமென்சிட்டி 8100 புராசஸர் இந்த போன்களை இயக்குகிறது. இது ஒரு 5ஜி புராசஸர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்
சாம்சங் நிறுவனத்தின் 64MP ISOCELL கேமரா இதில் முதன்மை சென்சாராக செயல்படுகிறது. இதில் 4,400mAh ஒற்றை செல் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை ஊக்குவிக்க 120W வாட் பாஸ்ட் சார்ஜிங் அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது.
5G, 4G LTE, வைஃபை 6, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், NFC, டைப்-சி, 3.5mm ஹெட்போன் ஜாக் போன்ற இணைப்பு ஆதரவினை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. டால்பி அட்மாஸ் தரத்திலான இரட்டை ஸ்பீக்கர்கள் கொண்ட ஸ்டீரியோ சவுண்ட் இதில் உள்ளது.