சமீப காலமாக இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அதிக அளவில் பகிரப்படுகின்றன. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கு வேலை தரக்கூடியவை. இந்த படத்தில் ஒரு புலி இஙே இருக்கிறது. மறைந்திருக்கும் இன்னொரு புலி எங்கே இருக்கிறது என கண்டுபிடியுங்கள். இதுவரை 1 சதவீதம் மட்டுமே மறைந்திருக்கும் புலியை கண்டுபிடித்துள்ளனர்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை அளிக்கக்கூடியவை. அதோடு, ஆளுமையைக் குறிப்பதாலும் பலரும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்ப்பவர்களின் மனதை ஏமாற்றுகின்றன. அதில் மறைந்திருக்கும் படம் அல்லது முதல் பார்வையில் தெரியாத படம் எதுவாக இருந்தாலும், இந்த படங்கள் அனவரையும் ஈர்த்து வருகிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஒரு காடு போன்ற ஒரு சிறிய புல்வெளியில் ஒரு புலி நிற்பதைப் பாருங்கள்.
இந்த படத்தில் கர்ஜிக்கும் புலி எல்லோருக்கும் தெரியும் ஆனால், இந்த படத்தில் இன்னொரு புலி படத்தில் மறைந்துள்ளது. அடர் பச்சை மற்றும் மஞ்சள் நிறத் திட்டுகள் கொண்ட இடம் மற்றொரு புலியை எளிதில் மறைத்துவிடும்.
இந்த படத்தைப் பார்த்த மொத்த பார்வையாளர்களில் 1 சதவிகிதம் பேர் மட்டுமே மறைந்திருக்கும் புலியைக் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய படங்கள் எப்படி தோற்றமளிக்கிறது என்பதை அறிந்த எவரும் நிச்சயமாக காடுகளுக்குள்ளும், புதர்களுக்கு இடையேயும் பார்ப்பார்கள். ஆனால், புலி அங்கெல்லாம் இல்லை. உண்மையில் புலி எங்கே இருக்கிறது என்று கண்டுபிடியுங்கள்.
உங்களால் மறைந்திருக்கும் புலியைக் கண்டுபிடிக்க முடியவில்லையா? உங்களுக்கான விடையை இங்கே தருகிறோம். உண்மையில், மறைந்திருக்கும் புலி அதே புலியிலேயே உள்ளது. என்ன வேடிக்கையாக இருக்கிறதா? கரகாட்டக்காரன் படத்தில், கவுண்டமணி, செந்தில் நகைச்சுவைக் காட்சியில் வருவது போல, “ஒரு வாழைப்பழம் இங்க இருக்கு, இன்னொரு வாழைப்பழம் எங்க?” என்று கவுண்டமணி கேட்க, அதற்கு செந்தில் அந்த இன்னொரு வாழைப்பழம் இதுதானே என்று கூறுவது போல, இன்னொரு புலி இந்த புலியில்தான் மறைந்துள்ளது. ஆனால், கண்டுபிடிப்பது கடினம், “தி ஹிட்டென் டைகர்” என்ற வார்த்தை புலியின் உடல் முழுவதும் வரிகளால் எழுதப்பட்டுள்ளதைப் பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“