உலக நாடுகள் 6 முதல் 15 சதவீதம் வரையிலான பணவீக்கத்தில் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ள வேளையில் ஜிம்பாப்வே நாட்டின் பணவீக்கம் நீங்க நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்து மோசமான நிலையை எட்டியுள்ளது.
பாகிஸ்தான் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி.. இந்தியாவை விட 3 மடங்கு அதிகம்..!
ஜிம்பாப்வே
ஜிம்பாப்வே நாட்டின் பணவீக்க விகிதம் மே மாதத்தில் மீண்டும் மூன்று இலக்கங்களுக்கு உயர்ந்ததுள்ளது. அந்நாட்டின் மத்திய வங்கி பென்ச்மார்க் வட்டி விகதத்தைக் குறைத்த பின்பு ஜிம்பாப்வே நாணயத்தின் மதிப்பு வேகமாகச் சரிந்து பணவீக்கம் 100 சதவீதத்தைத் தாண்டியுள்ளது.
பணவீக்கம்
ஜிம்பாப்வே நாட்டின் பணவீக்கம் கடந்த மாதம் 96.4 சதவீதமாக இருந்த நிலையில் ஏப்ரல் மாதத்தில் 131.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தச் சரிவு மூலம் 10-மாதமாக 100 சதவீதத்திற்கும் கீழ் இருந்த பணவீக்கம் மீண்டும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
விலை வாசி
இதன் மூலம் ஜிம்பாப்வே நாட்டின் ஏப்ரல் மாதத்தில் விலை வாசி 21% அதிகரித்துள்ளன, இது ஜூலை 2020க்குப் பின் பதிவாகியுள்ளது அதிகப்படியான உயர்வாகும். இதேபோல் உணவுப் பொருட்களின் விலைகள் முந்தைய ஆண்டை விட 150% அதிகமாக அதிகரித்துள்ளன.
தென்னாப்பிரிக்கா நாடு
தென்னாப்பிரிக்க நாட்டின் முன்னாள் தலைவர் ராபர்ட் முகாபே வெளியேற்றப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகியும், பொருளாதார, உற்பத்தி மற்றும் பணவீக்கம் ஆகியவை தொடந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது.
பென்ச்மார்க் வட்டி
ஜிம்பாப்வே ரிசர்வ் வங்கி மே 9 ஆம் தேதியன்று தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை ஒரு டாலருக்கு 276 ஆக அறிவித்தது. இது இரண்டு நாட்களுக்குப் பிறகு ஜிம்பாப்வே அதிபர் எம்மர்சன் மனங்காக்வா வங்கிகளுக்குக் கடன் வழங்குவதைத் தற்காலிகமாகத் தடைசெய்த பின்பு அறிவிக்கப்பட்டது.
இந்தியா – பாகிஸ்தான் – சீனா
தற்போது இந்தியாவின் பெஞ்ச்மார்ச் விகிதமான 4.4 சதவீதத்தை ஒப்பிடுகையில் பாகிஸ்தான் நாட்டின் 13.75 சதவீத வட்டி விகிதமாக உள்ளது. இதேபோல் சீனாவில் தனது loan prime rate 4.45 சதவீதமாக அறிவித்துள்ளது.
Zimbabwe inflation crossed above 100 percent; Check full details
Zimbabwe inflation crossed above 100 percent; Check full details ஜிம்பாப்வே நாட்டின் பணவீக்கம் எவ்வளவு தெரியுமா..?