புதுடெல்லி: அமெரிக்காவின் குளிர்பான நிறுவனமான கோக கோலாவுக்கு வட இந்தியாவில் குளிர்பானம் தயாரிக்கும் நிறுவனமாக மூன் குளிர்பான நிறுவனம் செயல்படுகிறது.
உ.பி.யைச் சேர்ந்த சுசில் பட் மூன் குளிர்பான நிறுவனத்துக்கு எதிராக பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த தீர்ப்பாயம் அந்நிறுவனத்துக்கு ரூ.15 கோடி அபராதம் விதித்தது. மேலும், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆராயவும் குழு அமைத்தது. இதை எதிர்த்து மூன் நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு விசாரித்தது. மூன் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக பதிலளிக்குமாறு சுசிலுக்கு உத்தரவிட்டனர்.