மர நிழலுக்காக கடலை கடையில் உருவான கலவரம்.. பூராபேரும் கோபக்காரய்ங்களா இருக்காய்ங்க..!

ஆலங்குடியில் வெயில் கொடுமையால் வேப்ப மர நிழலுக்காக கடலை கடை முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தியதால் உருவான பிரச்சனை, இரு வியாபரிகளிடையேயான மோதலாகி அடித்துக் கொண்ட பரபரப்பு காட்சிகள் வெளியாகி உள்ளது..

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கடை வீதியில் ஏராளமான கடலை விதை கடைகள் உள்ளன. இங்கு கடலை விதைகளை வாங்க வந்த விவசாயி விஜய் என்பவர், வேப்பமர நிழலுக்காக தனது இருசக்கரவாகனத்தை தனலெட்சுமி கடலை கடை அருகே நிறுத்தி விட்டு, எதிரில் உள்ள செல்லதுரை என்பவரின் கடைக்கு கடலை விதை வாங்க சென்றதாக கூறப்படுகின்றது.

இதனை பார்த்த தனலெட்சுமி கடலை கடை உரிமையாளர் கண்ணதாசனின் மகன் தனது வண்டியை எடுத்து செல்லத்துடை கடைக்கு முன்பாக கொண்டு மறித்து விட்டதால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் வந்து பேசிக் கொண்டிருந்த போது, கண்ணதாசனின் மற்றொரு மகன், எதிர் கடைக்கு சென்று போலீஸ் முன்னிலையில் செல்லத்துரையை கன்னத்தில் இரண்டுமுறை அடித்து தள்ளி விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

செல்லத்துரை தனது உறவினரை உதவிக்கு அழைக்க, அவர் வந்ததும் செல்லதுரை தன் பங்கிற்கு கண்ணதாசனுக்கு எதிராக சத்தம் போட்டதால் மீண்டும் இரு தரப்பும் சாலையில் நின்று ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்

அங்கிருந்த ஊர் பெரியவர்கள் இருதரப்பையும் சத்தம் போட்டு கடைக்குள் அனுப்பி வைத்து சண்டையை விலக்கி விட்ட நிலையில், இருதரப்பும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், போலீசார் இரு தரப்பினரிடமும் புகார்களை பெற்று விசாரித்து வருகின்றனர்.

விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை என்பதை உணர்ந்து பொறுமையுடன் நடந்து கொண்டால் இது போன்ற சச்சரவுகளை தவிர்க்கலாம் என்று போலீசார் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.