வைரஸ் தடுப்பு மருந்துகள் மூலம் குரங்கு அம்மைக்கு சிகிச்சை

பிரின்சிடோஃபோவிர் மற்றும் டெகோவிரிமாட் ஆகிய இரண்டு வைரஸ் எதிர்ப்பு மருந்துகளுக்கு நோயாளிகளின் உடல்நிலை எப்படி பதிலளிக்கிறது என்பது பற்றி இந்த ஆய்வு ஆவணப்படுத்துகிறது. இந்த மருந்துகள் பெரியம்மை நோய்க்கு சிகிச்சையளிப்பதற்காக உருவாக்கப்பட்டன. மேலும், இவை விலங்குகளில் குரங்கு அம்மைக்கு எதிராக சில செயல்திறனை முன்னரே நிரூபித்துள்ளன.

குரங்கு அம்மை நோய் பற்றிய ஒரு புதிய ஆய்வு, சில வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் அறிகுறிகளைக் குறைக்கக்கூடும். மேலும், நோயாளிக்கு நோய் தொற்றக்கூடிய நேரத்தைக் குறைக்கும் திறனைக் கொண்டிருக்கலாம் என்று கூறுகிறது. தி லேன்செட் இன்ஃபெக்‌ஷியஸ் டிசிஸ் இதழில் (The Lancet Infectious Diseases) வெளியிடப்பட்ட ஆய்வு, 2018 மற்றும் 2021 க்கு இடையில் இங்கிலாந்தில் குரங்கு அம்மை கண்டறியப்பட்ட ஏழு நோயாளிகளிடம் நடத்தப்பட்டது.

பிரின்சிடோஃபோவிர் மற்றும் டெகோவிரிமாட் ஆகிய இரண்டு வைரஸ் எதிர்ப்பு மருந்துகளுக்கு நோயாளிகளின் உடல்நிலை எப்படி பதிலளிக்கிறது என்பது பற்றி இந்த ஆய்வு ஆவணப்படுத்துகிறது. இந்த மருந்துகள் பெரியம்மை நோய்க்கு சிகிச்சையளிப்பதற்காக உருவாக்கப்பட்டன. மேலும், இவை விலங்குகளில் குரங்கு அம்மைக்கு எதிராக சில செயல்திறனை முன்னரே நிரூபித்துள்ளன.

இந்த ஆய்வில் பிரின்சிடோஃபோவிர் மருத்துவ ரீதியாக பலனளிக்கிறது என்பதற்கான சிறிய ஆதாரங்களைக் கண்டறிந்தது. ஆனால், டெகோவிரிமாட்டின் சாத்தியக்கூறுகள் பற்றி கூடுதல் ஆராய்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்கும் என்று முடிவு செய்தது.

2018 மற்றும் 2019-க்கு இடையில், இங்கிலாந்தில் உள்ள உயர் விளைவு தொற்று நோய் (HCID) பிரிவுகளில் 4 நோயாளிகள் குரங்கு அம்மைக்கு சிகிச்சை பெற்றனர். அவர்களில் மூன்று பேர் மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள். நான்காவது மருத்துவப் பணியாளர் ஒருவருக்கு ஏற்பட்டது. ஆப்பிரிக்காவிற்கு வெளியே உள்ள மருத்துவமனை அமைப்பில் குரங்கு அம்மை நோய் பரவுவதற்கான முதல் எடுத்துக்காட்டு இது.

நைஜீரியாவில் இருந்து பயணம் செய்த ஒரு குடும்பத்தில் 2021-இல் இங்கிலாந்தில் மேலும் 3 பேருக்கு நோய் இருப்பதாகப் பதிவாகியுள்ளன. அவர்களில் இரண்டு நோயாளிகள் ஆப்பிரிக்காவிற்கு வெளியே உள்ள குடும்பத்தில் பரவுவதற்கான முதல் எடுத்துக்காட்டுகளாக உள்ளனர்.

மருந்து அவர்களுக்கு எப்படி பலனளித்தது?

2018-19 ஆம் ஆண்டின் 3 நோயாளிகளுக்கு மேற்கு ஆபிரிக்காவிலிருந்து வந்த தொற்றுநோய்களான் சொறி தோன்றிய ஏழு நாட்களுக்குப் பிறகு பிரின்சிடோஃபோவிர் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டன. பிரின்சிடோஃபோவிர் எந்த உறுதியான பலனையும் கொண்டிருக்கவில்லை. இருப்பினும், பிரின்சிடோஃபோவிர் சிகிச்சையானது நோயின் போக்கில் அல்லது வேறு மருந்தளவு அட்டவணையில் வேறுபட்ட விளைவுகளை அளித்திருக்குமா என்பது தெரியவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டனர். நான்கு நோயாளிகளும் முழுமையாக குணமடைந்துள்ளனர்.

2021 இல் 3 நோயாளிகளில் 1 குழந்தையும் அடங்கும். குழந்தை லேசான நோயைக் கண்டு குணமடைந்தது. அவர்களில், ஒருவர் டெகோவிரிமாட் மூலம் சிகிச்சை பெற்றார். இந்த தொற்றில் உள்ள மற்ற நிகழ்வுகளை விட குறைவான கால அறிகுறிகளையும் மேல் சுவாசக்குழாய் வைரஸ் உதிர்தலையும் அனுபவித்தார். இருப்பினும், அத்தகைய சிறிய குழுவில் வைரஸ் தடுப்பு செயல்திறன் குறித்து முடிவுகளை எடுக்க முடியாது என்று ஆசிரியர்கள் குறிப்பிட்டனர். வைரஸ் தடுப்பு மருந்துகள் பற்றிய கூடுதல் ஆராய்ச்சிக்கு அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

நிமோனியா அல்லது செப்சிஸ் போன்ற குரங்கு அம்மையின் பொதுவான கடுமையான சிக்கல்களை நோயாளிகள் யாரும் அனுபவிக்கவில்லை.

தாக்கங்கள்

குரங்கு அம்மை ஒரு அரிய நோய், பெரியம்மை வைரஸின் நெருங்கிய தொடர்புடைய வைரஸால் ஏற்படுகிறது. தற்போது அங்கீகரிக்கபட்ட சிகிச்சைகள் எதுவும் இல்லை.

இந்த நோய்க்கு உரிய தொற்று கட்டுப்பாடு மற்றும் சிகிச்சை உத்திகள் இன்னும் நிறுவப்படவில்லை என்பதால், இந்த ஆய்வின் தரவு, நோயின் மருத்துவ அம்சங்கள் மற்றும் பரிமாற்ற இயக்கவியல் ஆகியவற்றை மேலும் புரிந்துகொள்வதற்கான உலகளாவிய முயற்சிகளைத் தெரிவிக்க உதவும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

“ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் மே 2022 இல் குரங்கு அம்மை பரவுவதற்கு என்ன காரணம் என்பதை பொது சுகாதார அதிகாரிகள் புரிந்து கொள்ள முயற்சி செய்கின்றனர் – இது பயணத்தையோ அல்லது முன்னர் அறியப்பட்ட நோயாளியின் அடையாளம் காணப்பட்ட தொடர்பையோ புகாரளிக்காத பல நோயாளிகளை பாதித்துள்ளது – எங்கள் ஆய்வு மனிதர்களில் குரங்கு அம்மை நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கு வைரஸ் தடுப்பு மருந்துகளின் பயன்பாடு குற்த்து சில முதல் நுண்ணறிவுகளை வழங்குகிறது. ” என்று லிவர்பூல் பல்கலைக்கழக மருத்துவமனைகள் என்.எச்.எஸ் அறக்கட்டளை நிறுவனத்தின் டாக்டர் ஹக் அட்லர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.