இந்தியாவின் முன்னணி டெக்ஸ்டைல் நிறுவனமான ஆதித்யா பிர்லா பேஷன்ஸ் & ரீடெயில் லிமிடெட் நிறுவனத்தின் பங்கினை வாங்கலாம் என தரகு நிறுவனம் கணித்துள்ளது.
ஏன் இப்பங்கினை வாங்க பரிந்துரை செய்துள்ளது. இதன் இலக்கு விலை என்ன? வேறு ஏதும் கவனிக்க வேண்டிய காரணிகள் என்ன?
பாகிஸ்தான் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி.. இந்தியாவை விட 3 மடங்கு அதிகம்..!
தற்போது இப்பங்கின் நிலவரம் என்ன? நிபுணர்கள் என்ன கூறுகின்றனர். வாருங்கள் பார்க்கலாம்.
![முதலீடு திரட்ட திட்டம்](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/27-1422329745-bullbear4-1653494679.jpg)
முதலீடு திரட்ட திட்டம்
இந்த நிறுவனம் ஜிஐசி சிங்கப்பூர் நிறுவனத்திடமிருந்து, 22 பில்லியன் ரூபாய் மூலதனத்தினை திரட்ட நிறுவன வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நிதியானது புதிய பங்கு விற்பனை மூலம் 3 பில்லியன் ரூபாயும், மாற்றத்தக்க பத்திரங்கள் மூலம் 19 பில்லியன் ரூபாயினையும் திரட்டவுள்ளது.
![இலக்கு விலை](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/31-1438338030-stock-market-1653494688.jpg)
இலக்கு விலை
இதற்கிடையில் இப்பங்கின் இலக்கு விலையாக 360 ரூபாயினை எம்கே குளோபல் நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது. இன்று சந்தை முடிவில் இப்பங்கின் விலையானது என் எஸ் இ-யில் 3.37% குறைந்து, 257.70 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதே பிஎஸ்இ-ல் இப்பங்கின் விலையானது, 3.41% குறைந்து, 257.40 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்ச விலை 321.95 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 181.70 ரூபாயாகும்.
![வருமானம்?](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/sensex-03-1517924234-1577792195-1653494698.jpg)
வருமானம்?
கடந்த 1 ஆண்டில் இப்பங்கின் விலையானது 40.38% ஏற்றம் கண்டுள்ளது. இதே நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 30% ஏற்றம் கண்டுள்ளது. எனினும் கடந்த ஒரு வாரத்தில் இப்பங்கின் விலையானது 8% சரிவினைக் கண்டுள்ளது.
![ஏன் வாங்கலாம்?](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/23-1435044152-market-movement-1653494671.jpg)
ஏன் வாங்கலாம்?
வலுவான வளர்ச்சி விகிதமானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், இப்பங்கின் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம். இதன் மார்ஜின் விகிதமானது நல்ல வளர்ச்சியினை கண்டு வரும் நிலையில், இது 2025ம் நிதியாண்டில் 30% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
![நிறுவனம் என்ன செய்கிறது?](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/20-1445313855-stockmarket8-1653494662.jpg)
நிறுவனம் என்ன செய்கிறது?
இந்தியாவின் மிகப்பெரிய ஆடை நிறுவனமான இது, பல முன்னணி பிராண்டுகளையும் விற்பனை செய்து வருகின்றது. இது லூயில் பிலிப், வான் ஹியூசன், ஆலன் சோலி, பீட்டர் இங்கிலாந்து உள்ளிட்ட இந்தியாவின் மிகச்சிறந்த பிராண்டுகளின் தாயகமாக உள்ளது. இதன் சந்தை மூலதனம் 24,150 கோடி ரூபாயாகும். இது ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இது ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஒரு பகுதியாகும். இது வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் உள்ள 36 நாடுகளில் வணிகம் செய்து வருகின்றது.
Emkay Global Recommends buying this fashion & retail stock for over 40% returns
MK global brokerage suggests to buy that Aditya Birla stake, It has set a target price of 360 rupees.