பிரதமர் மோடி நாளை தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறார். சென்னை விமான நிலையத்துக்கு நாளை மாலை 5.10 மணிக்கு வரும் பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் வரவேற்க உள்ளனர்.
பிரதமர் மோடி தனது பயணத்தின்போது ரூ.31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில், ரயில்வே துறையின் புதிய திட்டங்கள், உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரண்டு வந்து பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கிறார்கள். மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி நாளை சென்னை வருவதையொட்டி நாளை வரை ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதித்து காவல்துறை எச்சரிக்கை.
சென்னை துறைமுகம் – மதுரவாயல் நான்கு வழி பறக்கும் சாலை திட்டம் ரூபாய் 5850 கோடியில் திட்டமிடப்பட்டுள்ளது.
590 கோடி ரூபாய் மதிப்பில் தாம்பரம்-செங்கல்பட்டு சென்னை புறநகர் ரயில் மூன்றாவது பாதை அமைக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க இருக்கிறார்.
தமிழகத்தில் மோடியின் வருகையை எதிர்த்து யாரும் போராட்டங்கள் நடத்தக்கூடாது என முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டமாக கூறியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.