பணஜி-கோவாவில் வீடு புகுந்து 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடிய கொள்ளையர்கள், ‘டிவி’ திரையில், ‘ஐ லவ் யூ’ என, எழுதி வைத்து சென்றுள்ளனர்.
கோவாவின் பணஜியை சேர்ந்தவர் ஆசிப் ஜெக். இவருடைய சகோதரரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி 23ம் தேதி இரவு நடந்தது. இதில் பங்கேற்க ஆசிப் குடும்பத்துடன் சென்றார். நிகழ்ச்சி முடிந்து, நேற்று முன்தினம் அதிகாலை 1:00 மணிக்கு வீடு திரும்பினார். வீட்டில் பொருட்கள் இறைந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோக்கள் உடைக்கப்பட்டு பல்வேறு பொருட்கள் திருடப்பட்டு இருந்தன.
கழிப்பறை ஜன்னலை உடைத்து வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கொள்ளைஅடித்துள்ளனர்.பொருட்களை திருடிய கொள்ளையர்கள் நன்றி மறவாதவர்கள் போலிருக்கிறது.
திருடிய வீட்டில் இருந்த டிவி திரையில், ஐ லவ் யூ என, எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளனர்.சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தடயங்கள் மற்றும் கைரேகைகளை சேகரித்ததுடன், கொள்ளையர்களின் இந்த வினோத செயல் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
Advertisement