ஆயுள் தண்டனையில் ஜெயிலுக்கு போகும் யாசின் மாலிக்!

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியதாகவும் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்
யாசின் மாலிக்
கடந்த 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கு டெல்லி தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.,) நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், யாசின் மாலிக் குற்றவாளி என்று கடந்த 19 ஆம் தேதி தீர்ப்பளித்தது.

மேலும், யாசின் மாலிக்கின் சொத்து விவரம் குறித்து அவரிடம் பிரமாணப் பத்திரம் பெற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் தண்டனை விவரம் மே 25 ஆம் தேதி (இன்று) அறிவிக்கப்படும் என தெரிவித்தது.

அதன்படி, அவருக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில், அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று என்ஐஏ கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், நான் காந்திய கொள்கைகளை பின்பற்றி வருகிறேன்; எதற்கும் பிச்சை எடுக்க மாட்டேன் என்று தீர்ப்பு வெளியாவதற்கு முன்பு யாசின் மாலிக் தெரிவித்திருந்தார். இந்த நிலையில். யாசின் மாலிக்கிற்கு
ஆயுள் தண்டனை
விதித்து டெல்லி சிறப்ப நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.