போபால்,-மத்திய பிரதேச சுரங்கத்தில், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரக் கல்லை கிராமத்து பெண் கண்டெடுத்திருக்கும் தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பன்னா மாவட்டத்தில் வைரச் சுரங்கங்கள் அதிகம் உள்ளன. இவற்றில், 12 லட்சம் காரட் வைரம் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அரவிந்த் சிங் என்ற விவசாயி, கிருஷ்ணா கல்யான்புர் பகுதியில் சிறிய சுரங்கத்தை குத்தகைக்கு எடுத்துள்ளார். அவர் மனைவி சமேலி பாய், அந்த சுரங்கத்தில் வைரத்தை தேடி வந்துள்ளார்.
அப்போது அவருக்கு ஒரு வைரக்கல் கிடைத்துள்ளது. உடனே அதை உள்ளூர் நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளார். இந்த வைரம் ஏலத்தில், 10 லட்சம் ரூபாய் வரை விலை போகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. விற்பனைக்கு பின், வரிகள் போக மீதி தொகை சமேலி பாய்க்கு கிடைக்கும். அந்தப் பணத்தில் சிறிய வீடு வாங்க உள்ளதாக அரவிந்த் சிங் தெரிவித்துள்ளார்.
போபால்,-மத்திய பிரதேச சுரங்கத்தில், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரக் கல்லை கிராமத்து பெண் கண்டெடுத்திருக்கும் தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.மத்திய பிரதேசத்தில்,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.