திண்டுக்கல் அருகே அடுத்தடுத்து மூன்று வீடுகளில் கொள்ளைச் சம்பவம் அரங்கேறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி நரசிம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ரத்தினம். இவரின் வீட்டில் இருந்த வெள்ளி பொருட்கள் மற்றும் 20000 ரூபாய் திருடு போனது.
இதேபோல அருகே உள்ள பக்கத்தில் இருந்த ஓட்டு வீட்டிலும் ஓட்டை பிரித்து உள்ளே நுழைய முயன்றபோது நாய் குரைத்ததால் திருடர்கள் தப்பிச்சென்றனர்.
இதுகுறித்து அந்த பகுதி வாசிகள் தெரிவிக்கையில், கடந்த மூன்று நாட்களில் இந்த பகுதியில் மட்டும் ஐந்து வீடுகளில் திருட்டு சம்பவம், கொள்ளை சம்பவம் அரங்கேறி இருப்பதால், ரோந்து பணி காவலர்கள் இரவிலும் அதிகம் வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.