12 நாட்களில் 100 கோடி வசூலித்த சிவகார்த்திகேயனின் டான்
‛டாக்டர்' படத்தை அடுத்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‛டான்'. லைகா நிறுவனம் தயாரித்த இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்தார். இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வெளியான நிலையில் திரைக்கு வந்து ஐந்து நாட்களில் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இந்த நிலையில் தற்போது டான் படம் வெளியாகி 12 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அப்படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அந்த வகையில் டாக்டர் படத்தை அடுத்து சிவகார்த்திகேயனின் டான் படமும் 100 கோடி வசூலித்து மெகா பிளாக் பஸ்டர் படமாகி இருக்கிறது.