லண்டன்,-கொரோனா ஊரடங்கு காலத்தில் விதிகளை மீறி மது விருந்தில் பங்கேற்றதற்காக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீண்டும் மன்னிப்பு கேட்டார்.
கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருந்தபோது, ஐரோப்பிய நாடான பிரிட்டனில், 2020ல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடும் கட்டுப்பாடுகள் இருந்த நிலையில், பல்வேறு மது விருந்து நிகழ்ச்சிகளில் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்டோர் பங்கேற்றதாக புகார் எழுந்தது.இது தொடர்பாக மூத்த அரசு அதிகாரியான ஸ்யூ கிரே விசாரணை நடத்தினார்.
பிரதமர் போரிஸ் ஜான்சன், நிதி அமைச்சரான இந்தியாவை பூர்வீகமாக உடைய ரிஷி சுனாக் உள்ளிட்டோர், அரசு விதிகளை மீறியதாக, விசாரணை அறிக்கையில் கூறப்பட்டது.முதலில் தன் தவறை ஒப்புக் கொள்ள மறுத்த பிரதமர் போரிஸ் ஜான்சன், பின் பார்லிமென்டிலேயே தவறை ஒப்புக் கொண்டார். இந்நிலையில், பார்லிமென்டின், ‘ஹவுஸ் ஆப் காமன்ஸ்’ சபையில் நேற்று மீண்டும் மன்னிப்பு கேட்டார் போரிஸ் ஜான்சன்.”ஒரு நல்ல பாடத்தை கற்றுள்ளேன். நடந்த சம்பவங்களுக்கு நான் மன்னிப்பு கேட்பதுடன், முழு பொறுப்பையும் ஏற்கிறேன்,” என, அவர் குறிப்பிட்டார்.ஆனால், எதிர்க்கட்சிகள் இதை ஏற்க மறுத்து கோஷமிட்டன.
Advertisement