அமேசான் இணையதள கடையில், பிளாஸ்டிக் வாளி சுமார் 26 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்ற அறிவிப்பு ஒன்று, சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டது.
அதிலும் இந்த பிளாஸ்டிக் வாளியை இஎம்ஐ மூலம் செலுத்தலாம் என்ற வசதியையும் அமேசான் நிறுவனம் வழங்கி இருப்பதாக, அந்த புகைப்படத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து வலைதள நெட்டிசன்கள், நூத்தி ஐம்பது ரூபாய் மதிப்புள்ள ஒரு பிளாஸ்டிக் வாளியை, இருபத்தி ஆறு ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்கிறீர்களே உங்களுக்கு இது நியாயமா? என்று கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் இந்தப் பிளாஸ்டிக் வாளி விற்றுத் தீர்ந்து விட்டதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இருபத்தி ஆறு ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய அந்த புண்ணியவான் ஏழை யார்? என்று தற்போது நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.