நான்கு மேற்கத்திய நாடுகளில் இருந்து பத்துப் பொதிகளாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சுமார் 23.8 மில்லியன் பெறுமதியான ‘குஷ்’ என்ற கஞ்சா போதைப் பொருளை (24) மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தில் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகத்தின் காரணமாக மத்திய அஞ்சல் பரிமாற்றகத்தில் இவற்றை, கொழும்பு சுங்க அதிகாரிகள் தடுத்து வைத்திருந்ததாகவும். ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி , கனடா, மற்றும் அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப் பொதிகள், சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு, பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் மத்திய அஞ்சல் பரிமாற்றக அதிகாரிகள் முன்னிலையில் நேற்று பிரித்து பார்வையிடப்பட்டுள்ளது.
இவை இனிப்பு பண்டங்கள் மற்றும் ஏனைய பொருட்களின் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், இவை 2 கிலோ 385 கிராம் எடை கொண்டதும் , சுமார் 2 கோடியே 38 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதி எனவும் பிரதி சுங்கப் பணிப்பாளர் சுதாத சில்வா தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரணைக்காக கடத்தல் பொருட்கள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.