அலகாபாத்-உ.பி.,யில் மதக் கலவரத்தை துாண்டிய குற்றச்சாட்டில், ஒரு வாரம் பொதுமக்களுக்கு குடிநீர் மற்றும் சர்பத் வழங்க ஹபுர் கிராம நிர்வாகிக்கு, அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு சமீபத்தில் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானபோது, இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட வாய் தகராறு வன்முறையில் முடிந்தது. இதில் ஹபுர் கிராம நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
அவர் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி அஜய் பனாட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு:உ.பி.,யில் ‘கங்கா, ஜமுனா, தெஹ்ஸீப்’ கலாசார வழக்கப்படி ஹிந்துக்களும், முஸ்லிம்களும் பரஸ்பரம் அன்புடன், இரு தரப்பு பண்டிகைகளில் பங்கேற்பது காலம் காலமாக நடந்து வருகிறது. இந்த கலாசாரம் வேற்று மையில் ஒற்றுமையைகற்றுக் கொடுக்கிறது. மத நல்லிணக்கத்தை வளர்க்கிறது. இந்த கலாசாரத்தை கடைப்பிடிப்பதற்காக மனுதாரருக்கு ஜாமின் வழங்கப்படுகிறது.
அவர், ஒரு வாரம் பொதுமக்களுக்கு தண்ணீர் மற்றும் சர்பத் வழங்க உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.மனுதாரரின் வழக்கறிஞர், மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரும் ஒரு வாரத்திற்கு தண்ணீர், சர்பத் வழங்க உத்தரவிட வேண்டும் என்றார். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இது தொடர்பாக போலீசாருக்கு விண்ணப்பித்து அனுமதி பெருமாறு உத்தரவிட்டார்.
Advertisement