சென்னை: தமிழக அரசு ஊழியர்களின் 2021-22 ஆண்டுக்கான கணக்கு அறிக்கை, தமிழ்நாடு மாநில கணக்காயர் அலுவலக இணையதளத்தில் இம்மாத இறுதியில் பதிவேற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட் டுள்ளது.
தமிழக அரசு பணிநிலை சார்ந்த அனைத்து இந்திய அரசு சேவை அதிகாரிகள், தமிழக அரசு ஊழியர்கள், தமிழ்நாடு ஊராட்சி ஒன்றியம், நகராட்சி தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், சென்னை மற்றும் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்களின் 2021-22 நிதியாண்டுக்கான கணக்கு அறிக்கை (அக்கவுண்ட்ஸ் சிலிப்), தமிழ்நாடு மாநில கணக்காயர் அலுவலகத்தின் www.agae.tn.nic.in என்ற இணையதளத்தில் இம்மாத இறுதியில் பதிவேற்றம் செய்யப்படும்.
எனவே, அதிகாரிகள், சந்தாதாரர்கள், கணக்கு அறிக்கையை தங்கள் இணையதள பக்கத்தில் சென்று view account slip என்ற மெனுவின் கீழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த அலுவலக வலைதளத்தில் தங்களின் அலைபேசி எண்ணை பதிவு செய்த அனைத்து சந்தாதாரர்களுக்கும் பதிவேற்றம் குறித்த குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
இத்தகவலை மாநில துணை கணக்காயர் (நிதி) சி.ஜே.கார்த்திகுமார் தெரிவித்துள்ளார்.