முதற்கட்டமாக 21 மாநகராட்சிகளில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்ததாவது,
அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முறையாக செயல்படுத்துவது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்றும், முதற்கட்டமாக 21 மாநகராட்சிகளில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்தில் எவ்வித குறைபாடும் இல்லாமல் செயல்படுத்த கால அவகாசம் தேவைப்படுகிறது. இத்திட்டம் தொடங்கிய பிறகு மாணவர்களுக்கு காலை உணவு 8.30 வழங்கப்படும். அவர்கள் உணவு உண்பதற்கு 30 நிமிடங்கள் கொடுக்கப்பட்டு 9 மணிக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் 2022 – 2023ஆம் கல்வி ஆண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை என்று தெரிவித்துள்ளார்.