பாகிஸ்தானில் இஸ்லாமாபாத்தை நோக்கி இம்ரான் கானின் ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. வாகனங்கள், மரங்களுக்குத் தீ வைக்கப்பட்டது.
இஸ்லாமாபாதில் மெட்ரோ ரயில் நிலையம் தீ வைத்து எரிக்கப்பட்டது. போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. பிரதமர் பதவியை விட்டு விலக்கப்பட்ட இம்ரான் கான் தமது ஆதரவாளர்களைத் திரட்டி தலைநகர் நோக்கி பேரணியாக வருமாறு அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து இஸ்லாமாபாத், லாகூர், ராவல்பிண்டி, கராச்சி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வன்முறை ஏற்பட்டது. போலீசாருடன் இம்ரான் கான் ஆதரவாளர்கள் மோதினர். இதையடுத்து ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர் .சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது.