ஐ.பி.எல். கிரிக்கெட்: டேவிட் மில்லருக்கு கேப்டன் ஹர்திக் பாண்ட்யா புகழாரம்

கொல்கத்தா,

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு கொல்கத்தாவில் நடந்த பரபரப்பான முதலாவது தகுதி சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதில் ராஜஸ்தான் நிர்ணயித்த 189 ரன்கள் இலக்கை குஜராத் அணி 19.3 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட போது வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவின் பந்துவீச்சில் முதல் 3 பந்துகளையும் தொடர்ச்சியாக சிக்சருக்கு விரட்டியடித்து டேவிட் மில்லர் ஹீரோவாக ஜொலித்தார். மில்லர் 68 ரன்களுடனும் (38 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்), கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 40 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த ஆண்டில் தான் ஐ.பி.எல். போட்டியில் இணைந்தது. அறிமுக சீசனிலேயே இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்திருக்கிறது. மகுடத்துக்கான இறுதிப்போட்டி வருகிற 29-ந்தேதி ஆமதாபாத்தில் நடக்கிறது.

வெற்றிக்கு பிறகு குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அணியில் உள்ள 23 வீரர்களும் வெவ்வேறு குணாதிசயம் கொண்டவர்கள். ஒவ்வொரு விதமான திறமை உடையவர்கள். நம்மை சுற்றி நல்ல மனிதர்கள் இருந்தால் நல்லதே நடக்கும் என்று மில்லரிடம் கூறினேன். அணிக்கு வெளியே வாய்ப்பு கிடைக்காத வீரர்கள் கூட நன்றாக விளையாட வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள், வேண்டுகிறார்கள். இது அற்புதமான விஷயம். இதனால் தான் நாங்கள் இவ்வளவு தூரம் வந்துள்ளோம். எல்லாவற்றையும் விட விளையாட்டுக்கு மரியாதை அளிப்பது முக்கியம்.

டேவிட் மில்லரை ஏலத்தில் எடுக்க நிறைய பேர் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் ஏலத்தில் அவரை எங்கள் அணிக்கு எடுத்ததில் இருந்து அணியின் மேட்ச் வின்னராக திகழ்கிறார். இந்த ஆட்டத்தில் தனது ஆட்டத்தை தூக்கி நிறுத்திய விதத்தை நினைத்து உண்மையிலேயே நான் பெருமைப்படுகிறேன். பழகுவதற்கு இனிமையான ஒரு வீரர். அவருடன் இணைந்து விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

இன்று அவர் எப்படி விளையாடினாரோ அதைத்தான் நாங்கள் அவரிடம் இருந்து எப்போதும் எதிர்பார்க்கிறோம். இதை அவரிடம் தெளிவாக எடுத்துரைப்பது முக்கியம். ஒரு வேளை ஆட்டத்தில் சோபிக்காவிட்டாலும், பரவாயில்லை, இது ஒரு விளையாட்டு தானே என்று விட்டு விட வேண்டும்.

கேப்டன்ஷிப் அனுபவம் இதற்கு முன்பு எனக்கு கிடையாது. ஆனால் டோனி எனது வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். அவர் எனக்கு ஒரு சகோதரர். அன்பு நண்பர் மற்றும் எனது குடும்பத்தில் அவரும் ஒருவர். அவரிடம் இருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளேன். என்னை பொறுத்தவரை எல்லா விதத்திலும் நான் வலுவாக இருக்க வேண்டும். தற்போது கேப்டனாக எல்லாவற்றையும் என்னால் நிர்வகிக்க முடிந்ததை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.

எந்த ஒரு சூழலிலும் அமைதியான அணுகுமுறையை மேற்கொள்வேன். அப்போது தான் சிறந்த முடிவுகளை எடுக்க முடியும். எனது வாழ்க்கையிலும் சரி, கிரிக்கெட் பயணத்திலும் சரி, கூடுதலாக 10 வினாடி யோசித்து முடிவெடுப்பது தான் என் பாணி. அவசரப்படமாட்டேன்.

இவ்வாறு பாண்ட்யா கூறினார்.

தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவரான 32 வயதான டேவிட் மில்லர் 2020 மற்றும் 2021-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். கடந்த ஏலத்திற்கு முன்பாக அவரை ராஜஸ்தான் கழற்றி விட்டதால் ரூ.3 கோடிக்கு குஜராத் அணி வாங்கியது. இப்போது ராஜஸ்தானை முதலாவது தகுதி சுற்றில் புரட்டியெடுத்துள்ளார். வெற்றிக்கு பிறகு மில்லர் தனது பழைய அணியை நினைத்து டுவிட்டரில், ‘வருந்துகிறேன்…. ராயல்ஸ் குடும்பம்’ என்று பதிவிட்டுள்ளார்.

ஆட்டம் குறித்து மில்லர் கூறுகையில், ‘ கடைசி கட்டத்தில் நான் கொஞ்சம் பதற்றமாக இருந்தேன். கேப்டன் பாண்ட்யா, நல்ல ஷாட்டுகளை ஆடும்படியும், ஆள் இல்லாத பகுதிகளில் பந்தை விரட்டும்படியும் சொல்லிக் கொண்டே இருந்தார். சேசிங்கை பொறுத்தவரை பாண்ட்யா பதற்றமின்றி அமைதியான முறையில் செயல்படுகிறார். எனக்கு வழங்கப்பட்ட பணியை நான் உற்சாகமாக செய்து வருகிறேன். பல ஆண்டுகள் விளையாடி வருவதால் எனது ஆட்டத்தை நான் நன்கு புரிந்து வைத்துள்ளேன். என் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்பு அளித்து வரும் அணி நிர்வாகத்துக்கு நன்றி’ என்றார்.ஐ.பி.எல். கிரிக்கெட்டில் குஜராத் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி: டேவிட் மில்லருக்கு கேப்டன் ஹர்திக் பாண்ட்யா புகழாரம்

கொல்கத்தா,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் குஜராத் அணி இறுதிப்போட்டியை எட்ட உதவிய டேவிட் மில்லருக்கு கேப்டன் ஹர்திக் பாண்ட்யா புகழாரம் சூட்டியுள்ளார்.

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு கொல்கத்தாவில் நடந்த பரபரப்பான முதலாவது தகுதி சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதில் ராஜஸ்தான் நிர்ணயித்த 189 ரன்கள் இலக்கை குஜராத் அணி 19.3 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட போது வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவின் பந்துவீச்சில் முதல் 3 பந்துகளையும் தொடர்ச்சியாக சிக்சருக்கு விரட்டியடித்து டேவிட் மில்லர் ஹீரோவாக ஜொலித்தார். மில்லர் 68 ரன்களுடனும் (38 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்), கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 40 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த ஆண்டில் தான் ஐ.பி.எல். போட்டியில் இணைந்தது. அறிமுக சீசனிலேயே இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்திருக்கிறது. மகுடத்துக்கான இறுதிப்போட்டி வருகிற 29-ந்தேதி ஆமதாபாத்தில் நடக்கிறது.

வெற்றிக்கு பிறகு குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அணியில் உள்ள 23 வீரர்களும் வெவ்வேறு குணாதிசயம் கொண்டவர்கள். ஒவ்வொரு விதமான திறமை உடையவர்கள். நம்மை சுற்றி நல்ல மனிதர்கள் இருந்தால் நல்லதே நடக்கும் என்று மில்லரிடம் கூறினேன். அணிக்கு வெளியே வாய்ப்பு கிடைக்காத வீரர்கள் கூட நன்றாக விளையாட வேண்டும் என்று முயற்சிக்கிறார்கள், வேண்டுகிறார்கள். இது அற்புதமான விஷயம். இதனால் தான் நாங்கள் இவ்வளவு தூரம் வந்துள்ளோம். எல்லாவற்றையும் விட விளையாட்டுக்கு மரியாதை அளிப்பது முக்கியம்.

டேவிட் மில்லரை ஏலத்தில் எடுக்க நிறைய பேர் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் ஏலத்தில் அவரை எங்கள் அணிக்கு எடுத்ததில் இருந்து அணியின் மேட்ச் வின்னராக திகழ்கிறார். இந்த ஆட்டத்தில் தனது ஆட்டத்தை தூக்கி நிறுத்திய விதத்தை நினைத்து உண்மையிலேயே நான் பெருமைப்படுகிறேன். பழகுவதற்கு இனிமையான ஒரு வீரர். அவருடன் இணைந்து விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

இன்று அவர் எப்படி விளையாடினாரோ அதைத்தான் நாங்கள் அவரிடம் இருந்து எப்போதும் எதிர்பார்க்கிறோம். இதை அவரிடம் தெளிவாக எடுத்துரைப்பது முக்கியம். ஒரு வேளை ஆட்டத்தில் சோபிக்காவிட்டாலும், பரவாயில்லை, இது ஒரு விளையாட்டு தானே என்று விட்டு விட வேண்டும்.

கேப்டன்ஷிப் அனுபவம் இதற்கு முன்பு எனக்கு கிடையாது. ஆனால் டோனி எனது வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். அவர் எனக்கு ஒரு சகோதரர். அன்பு நண்பர் மற்றும் எனது குடும்பத்தில் அவரும் ஒருவர். அவரிடம் இருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளேன். என்னை பொறுத்தவரை எல்லா விதத்திலும் நான் வலுவாக இருக்க வேண்டும். தற்போது கேப்டனாக எல்லாவற்றையும் என்னால் நிர்வகிக்க முடிந்ததை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.

எந்த ஒரு சூழலிலும் அமைதியான அணுகுமுறையை மேற்கொள்வேன். அப்போது தான் சிறந்த முடிவுகளை எடுக்க முடியும். எனது வாழ்க்கையிலும் சரி, கிரிக்கெட் பயணத்திலும் சரி, கூடுதலாக 10 வினாடி யோசித்து முடிவெடுப்பது தான் என் பாணி. அவசரப்படமாட்டேன்.

இவ்வாறு பாண்ட்யா கூறினார்.

தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவரான 32 வயதான டேவிட் மில்லர் 2020 மற்றும் 2021-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். கடந்த ஏலத்திற்கு முன்பாக அவரை ராஜஸ்தான் கழற்றி விட்டதால் ரூ.3 கோடிக்கு குஜராத் அணி வாங்கியது. இப்போது ராஜஸ்தானை முதலாவது தகுதி சுற்றில் புரட்டியெடுத்துள்ளார். வெற்றிக்கு பிறகு மில்லர் தனது பழைய அணியை நினைத்து டுவிட்டரில், ‘வருந்துகிறேன்…. ராயல்ஸ் குடும்பம்’ என்று பதிவிட்டுள்ளார்.

ஆட்டம் குறித்து மில்லர் கூறுகையில், ‘ கடைசி கட்டத்தில் நான் கொஞ்சம் பதற்றமாக இருந்தேன். கேப்டன் பாண்ட்யா, நல்ல ஷாட்டுகளை ஆடும்படியும், ஆள் இல்லாத பகுதிகளில் பந்தை விரட்டும்படியும் சொல்லிக் கொண்டே இருந்தார். சேசிங்கை பொறுத்தவரை பாண்ட்யா பதற்றமின்றி அமைதியான முறையில் செயல்படுகிறார். எனக்கு வழங்கப்பட்ட பணியை நான் உற்சாகமாக செய்து வருகிறேன். பல ஆண்டுகள் விளையாடி வருவதால் எனது ஆட்டத்தை நான் நன்கு புரிந்து வைத்துள்ளேன். என் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்பு அளித்து வரும் அணி நிர்வாகத்துக்கு நன்றி’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.