சென்னையில் பாஜக நிர்வாகி கொலை வழக்கில் 4 பேரை சேலத்தில் வைத்து கைது செய்தது தனிப்படை போலீஸ்.
சென்னை சிந்தாரிப்பேட்டையில் நேற்று முன்தினம் இரவு பாஜக நிர்வாகி பாலசந்தரை சரமாரி வெட்டிகொலை செய்யப்பட்டார். இது குறித்து சிந்தாரிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முன்விரோதம் காரணமாக பாலசந்தரை சித்தாரிப்பேட்டையை சேர்ந்த ரவுடி பிரதீப், அவரது சகோதரர் சஞ்சய் ஆகியோர் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து கொலையாளிகளை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை பிடிக்கும் பணி முடிக்கிவிடப்பட்டது.
இந்நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் தப்பி ஓடியவர்கள் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் எடப்பாடி விரைந்து சென்று அங்கு பதுங்கியிருந்த பிரதீப், சஞ்சய், கலை, ஜோதி ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
கொலை செய்து விட்டு பைக்கிலேயே தப்பிய பிரதீப், சஞ்சய், கலை ஆகியோர் சேலம் எடப்பாடி பகுதியில் வீட்டில் பதுங்கி இருப்பது தெரிந்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரை போலீசார் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடிவருகின்றனர்.
இதையும் படிக்கலாம்: சென்னையில் பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை – முன்விரோதம் காரணமா?Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM