தெற்கு கோவாவின் மார்கோ நகரில், வசித்து வருகிறார் ஆசிப் ஷேக். இவர் இரண்டு நாள் விடுமுறைக்காகத் தனது பங்களாவைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றுள்ளார். இந்த நிலையில், விடுமுறை முடித்து வந்த ஆசிப் ஷேக் தனது பங்களா வழக்கத்திற்கு மாறாகக் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியாகி உடனே கோவா மாநில காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை வீட்டைச் சோதனையிட்டது. அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் பங்களாவை உடைத்து, ரூ. 20 லட்சம் மதிப்புள்ள பொருள்களை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
மேலும், இது தொடர்பாக மார்கோவ் நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சச்சின் நர்வேகர் . “ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் 1.5 லட்சம் ரொக்கத்துடன் திருடர்கள் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும், தொலைக்காட்சியில் ஐ லவ் யூ என எழுதியிருப்பதைக் கண்டு உரிமையாளருக்கும், காவலர்களுக்கும் ஆச்சரியமாக இருந்தது. இன்று மார்கோவ் போலீஸீல் முறையான புகார் அளிக்கப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து அடையாளம் தெரியாத குற்றவாளிகள் மீது வீடு புகுந்து திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.