வட்டாட்சியர் அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காண மாவட்ட ஆட்சியர்கள், வட்டாட்சியர் அலுவலகம் சென்று நேரடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மாவட்ட ஆட்சியர் நேரடியாக தணிக்கை செய்யும் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆய்வு செய்த நிலையில் அமைச்சர் கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.